Wednesday, December 25, 2024
Homecinemaதிருமணத்திற்குப் பிறகு நயன்தாரா, விக்கி செய்த முக்கிய வேலை ! இது தெரிந்தால் ஆச்சர்யப்பட்டு போவீங்க...

திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா, விக்கி செய்த முக்கிய வேலை ! இது தெரிந்தால் ஆச்சர்யப்பட்டு போவீங்க !

சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களில் மிக முக்கியமான ஜோடி நயன், விக்னேஷ்சிவன். இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்த பிறகு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அதன் பின்பு இரு வீட்டார் சம்மத த்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

திருமணமே ஏக தடபுடலாக செய்து, அது ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தியாக்கி இருந்தனர். தொடர்ந்து அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் கோவில்கள் என தகவல்கள் அப்டேட் செய்து ஊடகங்கள் தினம் ஒரு அப்டேட் கொடுத்துக்கொண்டிருந்தது. 

பிரபல நிறுவனம் ஒன்றிற்கு தங்களுடைய செயல்பாடுகளை போட்டோ, வீடியோ எடுத்து வெளியிட அனுமதி கொடுத்திருந்தனர் இந்த தம்பதியினர். 

இதனையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, திடீரென தங்களுக்கு குழந்தை பிறந்திருப்பதாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியளித்தனர். அது ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அது ஓய்ந்த பிறகு தற்பொழுது தொழில் தொடர்பான புதிய வேலை ஒன்றைத் தொடங்கி, அது முடியும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திருமணத்திற்கு பிறகு தொழில் மற்றும்சம்பாத்தியத்தில் அதிக கவனம்செலுத்தி வரும் நயன், இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 
செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடங்களில் வரும் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளத இவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானதை செய்து கொண்டே உள்ளனர். 
கனெக்ட் திரைப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
அதிர்ச்சி தரும் தில்லர் & ஹார ர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அவர்களுடைய சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
பட வேலைகள் அனைத்தும் முடிந்து டீசர் வெளியான நிலையில் இப்படம் நாளை டிசம்பர் 22 ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கனெக்ட் திரைப்படம் இடைவேளையில்லாமல் 99 நிமிட படமாக வெளியாகிறது. இதில் இடம்பெற்ற  “நான் வரைகிற வானம்” பாடல் வெளியாகி தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments