நம்ம வீட்டு பிள்ளையில் கலக்கிய நடிகை மைனா.. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிரட்டி வருகிறார். ரசிகரகள் பெரிதும் விரும்பும் குடும்ப நடிகை மைனா. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் சக போட்டியாளர் திரு மணிகண்டன் அவர்கள் மைனாவின் சம்பளத்தை பேசியுள்ளார். தனலட்சுமியிடம் இது பற்றிய பேசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 6 சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்நிலையில் அதை வழக்கம் போல நம்முடைய உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.
தொடக்கம் முதலே அமர்க்களமாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 6 கலகலப்பு மற்றும் சண்டைக்கு பஞ்சமே இல்லை. கான்சப்ட் படி தொடர்ச்சியாக பிக்பாஸை மிக அழகாக கொண்டு சென்று கொண்டுள்ளனர்.
மொத்தம் 21 போட்டியாளர்களில் ஒரு சிலர் மட்டும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக ஜிபி முத்து சாந்தி, நிவாஷினி, ராபர்ட் ,குயின்ஸி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் இரண்டு வாரமே வீட்டிற்குள் இருந்த ஜிபி முத்து வெளியேற்றத்திற்கு ரசிகர்கள் வெகுவாக அதை ஏற்க முடியாமல் இருந்தனர். அரை செஞ்சுரி அடித்த பிக்பாஸ் நிகழ்வில் ந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என்று கமல் அவர்ள் ஏற்கனவே அறிவித்தார்.
சம்பளம் பற்றி பேசலாமா?
சக போட்டியாளரின் சம்பளம் பற்றி பிக் பாஸ் வீட்டில் பேசலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்ன நடந்தது என்றால் தனலட்சுமியிடம் மணிகண்டன் அவர்கள், “மைனா எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?” அந்த சம்பளத்திற்கு தகுந்த வேலை அவர் செய்ய மாட்டேன் என்கிறார்.
அதற்கு தன லட்சுமி , ஒரு நாளைக்கு எவ்வளவு வாங்குகிறார் என்று கேட்டதற்கு, மணிகண்டன் அவர்கள் , “மைனா ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்று அதில் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேறும்போது ஏறக்குறைய 1 கோடி ரூபாய் வரைக்கும் பெற வாய்ப்பிருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்பொது வைரல் ஆகி வருகிறது.
ஆனால் அவர் சொன்ன தகவல் உண்மை தானா ? அல்லது ப்ரோமோஷனுக்காக இப்படிப்பட்ட வீடியோ உருவாக்கப்பட்டதா என்று ரசிகர்கள் சந்தேகித்துள்ளனர்.
#பிக்பாஸ் #மைனா #சம்பளம்
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.