Monday, December 23, 2024
Homecinemaவாரிசு படத்தில் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகர் . இவரும் படத்தில் இருக்கிறாரா?

வாரிசு படத்தில் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகர் . இவரும் படத்தில் இருக்கிறாரா?

varisu movie

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி, தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்த உள்ள நிலைமையில், வாரிசு படத்தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மேலும் உற்சாகத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. 

பல மொழிகளில் எடுக்கப்படும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக இருக்கும் என கருதபடுகிறது. இந்நிலையில் அப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா இல்லையா ? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. 
சக நடிகர் அஜீத் நடிக்கும் “துணிவு” படத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் புக் செய்யப்பட்ட நிலமையில் மிக குறைந்த அளவே “வாரிசு” படத்திற்கு ஒதுக்குப்பட்டுள்ளதாக திரைப்பட குழுவினர் தெரிவித்திருந்தனர். 
அதற்கு சினிமா அரசியல் தான் காரணம் என கூறப்பட்டாலும், உண்மையில் அஜீத்தின் படத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது என்ற தகவலும் பகிரப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாரிசு உதயநிதி ஸ்டாலின் உதவியுடன் 50% திரையரங்குகள் வாரிசு படத்திற்கு ஒதுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சார்பாக வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக இந்த திரைப்படத்தில் அதிக நடிகர்கள்/நடிகைகள் பட்டாளங்கள் நடித்து வந்திருப்பதாகவும், அதில் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை உறுதிபடுத்தும் வகையில் ட்விட்டரில் படபிடிப்பின்போது, அவருக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்ட போட்டோ ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப் படத்தில் நடிகர் சரத்குமார், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளார் தில் ராஜூ-வும் உள்ளனர். உங்கள் பார்வைக்கு இதோ அந்த புகைப்படங்கள்.

#Varisu team wishes @realsarathkumar sir a very Happy Birthday!!#Vaarasudu #Thalapathy66 pic.twitter.com/cATdWQpeur

— Sri Venkateswara Creations (@SVC_official) July 14, 2022

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments