சமீபத்தில் தனுஷ்ஐஸ்வர்யா வீட்டில் கோடிக்கணக்கில் மதிப்பிலான நகைகள் திருட்டுப் போனது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி மற்றும் டிரைவர் ஆகியவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர்கள் தான் திருடி இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரித்து அதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட பொருட்கள் நகைகள் மற்றும் பணத்தை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்த பிறகு, குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்பொழுது விசாரித்த நீதிபதி குற்றவாளிகளின் குடும்பத்தினர் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவின் மீது தான் நிபந்தனை அற்ற ஜாமீன் கொடுக்கப்பட்டு அவர்கள் வெளியே வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா குடும்பத்தினர் கஷ்டப்பட்டு திருடர்களை காட்டிக்கொடுத்த எங்களுக்கு இது வருத்தமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதைப் பார்த்து மற்றவர்கள் அது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட கூடாது என்ற நிலைமை வரவேண்டும் என்பதற்காகத்தான் புகார் அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றதாகவும் அந்த குரூப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாமில் வெளியான ஐஸ்வர்யா ராய் வீட்டு டிரைவர் மற்றும் வேலைக்காரி அவர்கள் இருவரும் சேர்ந்து ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளனர் அதில் இனிமேல் அதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட மாட்டோம் என்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அது போன்ற தவறுகளை செய்து விட்டதாகவும், தங்களுக்கும் குடும்பம் குழந்தை குட்டிகள் இருப்பதாகவும் இனிமேல் அது போன்ற தவறுகளில் ஈடுபட மாட்டோம் என்றும், ரஜினிகாந்த் ஐஸ்வர்யா அவர்கள் எங்களை மீண்டும் வேலைக்கு சேர்க்க விட்டால் கூட பரவாயில்லை அவர்கள் முகத்தில் முழிக்க கூடஎங்களுக்கு தகுதி இல்லை… எனவே எங்களுடைய எதிர்கால வாழ்விற்காகவும், பிள்ளைகளின் நலன் கருதியும் எங்களை இந்த வழக்கில் இருந்து மன்னித்து விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இனி எங்கு சென்றாலும் தங்களால் வேலை செய்து பிழைக்க முடியாது என்ற நிலைமையில் மிகப்பெரிய தண்டனையாக இதை நாங்கள் கருதுகிறோம் என்று அவர்கள் ஒருசேர கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு தூய தண்டனை அவர்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற உறுதியில் இருப்பதாகவும் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.