கார்த்திக் அவர்கள் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின் மகனும் ஆவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் விருதையும், நான்கு முறை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் மற்றும் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளைத் தன்னுடைய சிறந்த நடிப்பிற்காக பெற்றுள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.கார்த்திக்கிற்கு அவரது முதல் மனைவி ராகினி மூலம் கௌதம், கைன் என இரு மகன்களும்,
இரண்டாவது மனைவி ரதி மூலம் தீரன் என்ற ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகன் கௌதம் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.மேலும், தற்போது பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி கடந்த 1988ஆம் ஆண்டு ராகினி என்பவரை கல்யாணம் செய்துகொண்டார். கார்த்திக் – ராகினி இருவரும் இணைந்து படத்தில் நடித்துள்ளார்கள். இதன்பின் 1992ஆம் ஆண்டு ராகினியின் தங்கை ரதியை திருமணம் செய்துகொண்டார்.