google areo – Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Mon, 17 Apr 2017 06:36:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கூகிள் ஏரியோ ஆப் ! https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d/ Mon, 17 Apr 2017 06:36:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d/ Read more]]> இப்போதெல்லாம் ஆன்லைன் மூலமே பல வேலைகளை செய்து முடிச்சிக்கிறோம். இனி எல்லா வேலைகளுமே ஆன்லனை மூலம் நடத்திக்க முடியும். அதுக்கு பயன்படுது சில ஆன்ட்ராய்ட் ஆப்ஸ். அவைகள் எப்படி வொர்க் அவுட் ஆகுதோ இல்லையோ, இப்போ கூகிள் வெளியிட்டிருக்கிற “கூகிள் ஏரியோ” சூப்பரா வொர்க் அவுட் ஆகுது.

google areo app for shopping

அப்படி என்னதான் இருக்கு இந்த ஆப்ல ?

உங்க வீட்ல ஏசி ரிப்பேரா? உடனே மெக்கானிக் எங்க இருக்காருன்னு தேடி அலைய வேண்டாம். இந்த ஆப் மூலம் தேடினா உங்களோட ஏரியா பக்கத்துல எந்த மெக்கானிக் அவைலபிளா இருக்காரு. எவ்வளவு அதுக்கு காஸ்ட் ஆகும்ங்கிற விபரமெல்லாம் அதுல தெரிஞ்சுக்கலாம். பிடிச்சிருந்தா உடனே புக் பண்ணி ரிப்பேர் பண்ண கூப்பிடலாம். வீட்டு பொருள் மட்டுமில்லீங்க…

வீட்ல எல்லோரும் சம்மர் டூர் போயிட்டாங்க. காலையில டிபன் சாப்பிடணும்னா ஒரு கீலோமீட்டர் தூரம் போயாகணும். 8.30க்கு எல்லாம் சாப்பிட்டே ஆகணும். இந்த சூழ்நிலையில, போகவும் முடியாது. ஆனால் சாப்பாடும் வேணும். என்ன செய்ய? இந்த ஆப் பயன்படுத்தி தேடினா பக்கத்துல என்னென்ன ஓட்டல்ஸ் இருக்கு. எதுல எதுல என்னென்ன டிபன் ஐட்டம் இருக்கு. ஆர்டம் பண்ணினா எவ்வளவு நேரத்துல வீட்டிற்கு வந்து சேரும்ங்கிறதையும் தெரிஞ்சுக்கலாம்.

இதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம். இந்த ஆப்பை கூகிள் ப்ளே ஸ்டோர் போய் இன்ஸ்டால் செய்துக்க வேண்டியதுதான். அப்புறம் கூகிள் மேப்ல உங்கள் வீடு எங்க இருக்குன்னு அட்ரசை மார்க் பண்ணிட்டீங்கன்னா போதும். ஒவ்வொரு தடவையும் இந்த ஆப் மூலம் நீங்க தேடும்போது உங்க வீட்டுக்கு பக்கத்துல அந்த வசதிகளை கொடுக்கிறவங்க இருந்தா காட்டும். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் இந்த ஆப் மூலமே நீங்க தேவைகளை பூர்த்தி செய்யலாம்.

இது சாதாரண விஷயம் இல்லீங்க. வருங்காலத்துல பயங்கரமா யூஸ் ஆகும்னு தெரிஞ்சுதான், ஏற்கனவே இந்த மாதிரி சில ஆப்கள் இருந்தாலும், கூகிள் துணிஞ்சி இதை கொண்டு வந்திருக்காங்க. அப்புறம் என்ன? உடனே இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.

சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. இப்போதை மும்பை மாதிரியான பெரு நகரங்கள்ல மட்டும்தான் இந்த ஆப் வேலை செய்யுது. இந்தியா மூலைமுடுக்கு, இண்டு இடுக்குகளில் எல்லாம் வேலை செய்ய கொஞ்ச நாள் ஆகும். கூகிள் அதுக்குள்ள எல்லாத்தையும் அப்டேட் பண்ணிடும். கூகிள் மேப்ல இப்போ எப்படி நம்ம ஊரை கூட பார்க்கிறோமோ, அப்படிதான், எல்லாத்துக்கும் வண்டியை தூக்கிட்டு போய் மெக்கானிக்கையோ, பூக்கார்ரையோ, போய் பார்க்க வேண்டியதில்லை. ஆப் மூலம் ஆர்டர் கொடுத்தா உடனே வீட்டுக்கு வந்து கொண்டு வந்துட போறாங்க. வீட்டு எலக்ட்ரிகல் வேலை, பிளிம்பிங் வேலைன்னு ஆளைத் தேடி ஓடற வேலை எல்லாம் மிச்சம்.

பெண்கள் பிடீட்டிசயனை கூட வீட்டுக்கே கூப்பிட்டுக்கலாம். வீட்டு வேலைகளுக்கு, கிளீன் செய்ய வேலைக்கு ஆள் தேவைன்னா கூட இதுலயே பார்த்து கூப்பிட்டுக்கலாம். எந்தெந்த நிறுவனங்கள் எப்படி சேவை செய்யுதுன்னு, இதுல ரிவ்யூ கொடுக்கிற ஆப்சனும் இருக்கிறதால, ஏற்கனவே சேவைகள் செய்து, நல்ல ஸ்டார்ஸ் வாங்கினவங்களையும் கூப்டுக்கிற வசதியும் இதுல இருக்கு. அதனால ஏமாந்து போறே வேலை இதுல இருக்காது.

முகவரி: Download and Install Google Areo app

Tags: android app, google Areo, Service app, Google areo app. google areo app for shopping.

]]>