google tips – Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Sun, 04 Aug 2013 06:43:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கூகிள் தேட கற்றுக்கொள்வோம்…! https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/ https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/#comments Sun, 04 Aug 2013 06:43:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/ Read more]]>
கூகிள் என்பதே தேடுவதற்காக, தேடிப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளம்தான்.. இது செய்யும் ஜாலங்கள் எத்தனை எத்தனையோ…!

இங்கு ஜாலங்கள் என்ற வார்த்தை பயன்பாட்டை குறிக்கும். இது தரும் பயன்கள் ஏராளம்… என்றாலும் தேடுதலில்.. தேடு பொறி அமைத்து கொடுப்பதில்தான் தன்னுடைய இணையவழி பரவலில் காலூன்ற ஆரம்பித்தது எனலாம்.

தற்போதுள்ள நிலைமையில் தேடுதலுக்கென தனிப்பட்ட வகுப்பே எடுக்கலாம்.. கூகிள் தேடு இயந்திரத்தில் தேடும் முறைகள் பல்வேறு வகைகளாக பிரித்தளிக்கப்பட்டு உள்ளது. 
to-get-a-perfect-result-on-google-search-step-by-step-methods
[Chennai] Population என தேடிப் பெறப்பட்ட முடிவு இது.

அவற்றில் முக்கியமான ஒரு முறையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். அதாவது ஒரு அடைப்புக்குறிக்குள் தேடப்பட வேண்டிய வார்த்தையைக் கொடுத்து, அடைப்புக்குறிக்கு வெளியே தேடும் வார்த்தைக்கு தொடர்பான வார்த்தையைக் கொடுத்து  தேடும்போது வேண்டிய சரியான தேடல் முடிவுகளை உடனடியாக பெற முடியும்.
தேடப்பட வேண்டிய பொதுவான வார்தையை அடைப்புக்குறிக்குள்ளும், முடிவு கிடைக்க வேண்டிய வார்த்தையை அடைப்புக்குறிக்கு வெளியேயும் கொடுத்து தேட வேண்டும்.
உதாரணமாக ஒரு பெருநகரத்தின் மக்கள் தொகையை நீங்கள் அறிய வேண்டுமெனில்
  • [chennai] population என தேட வேண்டும். தேடுதல் முடிவில் சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகையை காட்டும்.
  • இவ்வாறு ஒரு பொருளைப் பற்றித் தேடலாம். அந்த பொருளுக்குரிய பெயர் மற்றும் அதனுடைய சிறப்புகளைப் பற்றித் தேடலாம்..
  • குறிப்பிட்ட இடத்தின் காலநிலையை தேடிப் பெறலாம்.. உதாரணம்  [Namakkal] Weather
  • ஒரு நாட்டிற்கான நேர வித்தியாசத்தைப் பெற [Country]time என கொடுத்துத் தேடலாம்.
  • ஒரு நாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சூரிய உதயநேரத்தை அறிந்துகொள்ள முடியும். [City name] Coimbatore
இதே முறையில் பிரபலங்களின் பிறந்த நாள், இறந்த நாள், கால்குலேட்டர், திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்வுகள் என இதுபோன்று ஒவ்வொரு தேடலுக்கும் நாம் இந்த முறையைப் பயன்படுத்தி விரைவாகவும், தெளிவான தேடுதல் முடிவுகளைப் பெறலாம்.

கூகிள் தேடும் முறைகளை விரிவாக விளக்கும் “கூகிள் தேட கற்றுக்கொள்ளுங்கள்” என்ற இப்பதிவையும் வாசித்து பயன்பெறுங்கள்.

நன்றி.

– சுப்புடு

Hi friends, in this post i explain how to search on google for looking weather, calculator, sun rise time in particular country and city. you can use method for various search such as movie release date, country or particular city population and etc.

I think this is a useful informative post for you. thank you.. please leave your valuable comments.

]]>
https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%af%8b/feed/ 1
கூகிள் அக்கவுண்ட் கிரியேட் செய்த தேதியை கண்டறிய https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/ Tue, 25 Jun 2013 04:45:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%af%87/ Read more]]>

உங்களுடைய கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாளை தெரிந்துகொள்ள

வணக்கம் நண்பர்களே..!

நம்மில் பலபேர் கூகிள் கணக்கைத் தொடங்கி மின்னஞ்சல், பிளாக்கர் முதற்கொண்டு கூகிளின் பல்வேறுபட்ட வசிதிகளைப் பயன்படுத்திக்கொண்டிருப்போம். ஆனால் அந்த கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாள் எது என்று பெரும்பாலோனோருக்குத் தெரியாது.. காரணம் அதனுடைய பயன் தெரியாததே..!

கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியை, நாளை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

உங்களுடைய கூகிள் கணக்கை வேறு யாராவது முடக்கினாலோ, அல்லது உங்கள் கூகிள் கணத்தை திருடி மற்றவர்கள் பயன்படுத்தினாலோ அதை மீண்டும் மீட்டுக் கொண்டுவர இந்த தகவல்கள் பயன்படும்.

குறிப்பாக கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட நாளை  கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். சரி.. கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதியை கண்டறிவது எப்படி? அது மிகவும் எளிதான ஒன்றுதான்.

https://www.google.com/takeout/?pli=1 என்ற சுட்டியை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும். 
அதில் transfer your google + connetions to another account என்ற சுட்டியைக் கிளிக் செய்யுங்கள்.
அப்போது உங்களுக்கு இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும்.  உங்களுடைய பயனர்பெயர், கடவுச்சொல்லை கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள்.
அதற்கடுத்து தோன்றும் பெட்டியில் உங்களுடைய கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதி, மற்றும் நீங்கள் இறுதியாக உள்நுழைந்த தேதி ஆகியவற்றைக் காட்டும். created என்பதில் உங்களுடைய கூகிள் கணக்கு உருவாக்கப்பட்ட தேதி இருக்கும். அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கூகிள் அக்கவுண்ட்டை நீங்க அணுக முடியாத நிலையில் , கூகிளிடம் விண்ணப்பித்து உங்களுடைய கூகிள் கணக்கை மீட்க நிச்சயம் இந்த தேதி உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இந்த பதிவில் உங்களுக்குத் ஏதேனும் சந்தேகம் எனில் கருத்துரைப் பெட்டியின் மூலம் கேட்கலாம்.

நன்றி நண்பர்களே..!!!

-சுப்புடு
]]>
கூகிளில் தேட கற்றுக்கொள்ளுங்கள் https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/ Wed, 19 Jun 2013 17:27:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d/ Read more]]>
Tips to Search in Google search engine

வணக்கம் நண்பர்களே.. !

உலகில் பெரும்பாலான இணைய பயனர்கள் தேவையான தகவல்களை கூகிள் தளத்தின் மூலம் தேடிப்பெறுகின்றனர். விரைவாக தேடல் முடிவுகளைத் தருவதில் கூகிள் தளத்திற்கு நிகர் வேறெந்த தளமும் இல்லை.. இதானால் கூகிள் நிறுவனமே பல புதிய சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக பல்வேறு பயனுள்ள தளங்களையும் வழங்கி செயல்படுத்தி வருவதை கூறலாம். 

சரி.. கூகிள் தேடல் தளத்தில் உங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற சிறந்த வழிமுறைகள் உள்ளன. சாதாரணமாக நீங்கள் உள்ளிடும் சொற்களில் ஒன்றிரண்டு தொடர்பில்லாத முடிவுகளும் கிடைக்கும். குறிப்பாக முதற் பக்கத்தில் நீங்கள் தேடிய விஷயங்கள் கிடைக்காமலேயே போகும் வாய்ப்புகள் சில சமயம் ஏற்படுவதுண்டு. 

இனி, அவ்வாறு நிகழாமல் உங்களுக்குத்  என்ன தேவையோ, எது குறித்தான தகவல்கள் தேவையோ அவற்றை மட்டும் தேடிப்பெற முடியும். அதற்குரிய வழிமுறைகளைக் கீழே காண்போம். 

‘+’ குறியீடு: 

தேடல் பெட்டியில் நாம் உள்ளிட்ட சொற்றொடரில் குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்பாக ‘+’ சேர்த்து தேடும்பொழுது தேடல் முடிவுகளில் நிச்சயமாக ‘+’  குறியிடப்பட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். 
உதாரணமாக Specifications of +Samsung Android smartphone

‘-‘ குறியீடு: 

மேலே குறிப்பிட்ட செயலுக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது ‘-‘ குறியிடப்பட்ட வார்த்தை தேடல் முடிவுகளில் இடம்பெறாது. 
உதாரணமாக Specifications of -Samsung Android smartphone

‘~’ குறியீடு: 

கூகிள் தேடல் பெட்டியில் தேடுகின்ற சொல் அல்லது சொற்றொடரில் உள்ள வார்த்தைக்கு முன்பாக ‘~’ சேர்த்து தேடும்பொழுது அச்சொல்லிற்கு இணையான (Synonym)சொற்களை தேடல் முடிவில் காட்டும்.. 

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட: 

உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டும் தேடல் முடிவுகளைப் பெற கூகிள் தேடல் பெட்டியில் site:techbeen.com/android என உள்ளிட்டு தேடல் முடிவுகளைப் பெறலாம்.. இதில் Site என்ற வார்த்தையானது, அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடும்படி கொடுக்கும் கட்டளையாகும். 
உதாரணமாக 
site:techbeen.com/android 
site:website url/search word

குறிப்பிட்ட சொல்லின் பொருளை தெரிந்துகொள்ள : 

ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருள் அறிய இந்த ‘define’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். அதாவது கூகிள் தேடல் பெட்டியில் define: HTC எனத் தேடினால் HTC என்றால் என்ன என்பதற்கான பொருள் கிடைக்கும். 
உதாரணமாக define:smartphone

“” குறியீடு:

இந்த இரட்டை மேற்கோள் குறிக்கு நடுவில் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை உள்ளட்டு கூகிள் தேடல் பெட்டியில் தேடும்பொழுது எந்த வார்த்தை அல்லது சொற்றொடர் அப்படியே இடம்பெற்ற தளங்கள் தேடல் முடிவுகளாக கிடைக்கும். 
உதாரணம்: “Smartphone specifications, reviews, news”

‘*’ குறியீடு: 

இந்த குறீயீட்டை சொற்களின் பின்பகுதியில் பயன்படுத்தும்பொழுது அந்த சொல்லின் முழுமையான வடிவம் நமக்குத் தெரியும். 
உதாரணமாக tech been*

‘?’ குறியீடு: 

ஒரு சொல்லுக்கான அனைத்து எழுத்துகளும் உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் முதலிரண்டு அல்லது மூன்று எழுத்துகளுக்குப் பிறகு ‘?’ குறியைப் பயன்படுத்தும்பொழுது அதற்கான முழுமையான சொற்களை தேடல் முடிவில் காட்டும். 

பூலியன் ஆப்பரேட்டர்: 

பூலியன் ஆபரேட்டர் என்பவை AND, NOT, OR ஆகும்.  
இரு சொற்களுக்கு இடையே இந்த பூலியன் ஆபரேட்டரைப் பயன்படுத்தும்பொழுது தேடக்கூடிய சொற்களில் ஏதேனும் ஒன்றை இணைப்பில் தரும். 
உதாரணம் Android OR Windows 8

கூகிளில் குறிப்பிட்ட பகுதியில் தேவையானதை தேடிப்பெறுவது எப்படி என்பதை “கூகிளில் தேடக் கற்றுக்கொள்வோம்” என்ற இப்பதிவை வாசித்துப் பயன்பெறுங்கள். 

நன்றி.. 
– சுப்புடு
]]>