Bigg Boss, cinema

அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைந்த பிரபல நடிகை . யார் அந்த தெரியுமா?

பிக்பாஸ் சீசன் அதிக களை கட்டி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் ஜிபி முத்து முதல் என்ட்ரி ஆன பிறகு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன் பிறகு தொடர்ந்து 2 வாரங்கள் அவர் செய்த அட்ராசிட்டி இதுவரைக்கும் இல்லாத பிக்பாஸ் போல விறு விறுப்பாக சென்று கொண்டிருந்தது. 

திடீரென ஒரு நாள் ஹோம் சிக் ஏற்பட்டு, ஜிபி முத்து தன்னுடைய மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் வீட்டிற்கு செல்ல வேண்டியது கடமை ஆகிறது என்று கூறி, அதிக வருமானம் கொடுக்கும் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். 
அதன் பிறகு அவர் சில சினிமா திரைப்படங்களில் கமிட் ஆனதும், அவர் நடித்த பேய் படம் ஒன்றின் விழாவில் கலந்து கொள்ளதான் அவர் நாடகமாடி சென்றதும் என அவரைப் பற்றிய தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தது. உண்மையில் தன்னுடைய மகனுக்கு முடியாமல் போனதால், அவரால் அங்கு இருக்க முடியவில்லை என்பது, அவரது பேட்டியின் மூலம்  மக்கள் அறிந்து கொண்டனர். 
அவரது இடத்தை நிரப்ப இரண்டு புது முகங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தாலும், அவர் இருந்த அந்த இரண்டு வார கல கலப்பை யாராலும் தர முடியவில்லை எனபது தான் உண்மை. இந்நிலையில் மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 

அந்த அழகான நடிகை வேறு யாரும் இல்லை. அவர் நடிகை அஞ்சலிதான். 
ஏன் இந்த திடீர் பிரவேசம் என்ற ரீதியில் ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர் நடித்த Fall என்ற வெப் சீரிஸ் ஹாட் ஸ்டார் OTT தளத்தில் வெளியிடப்போவதாகவும், அந்த தொடரை ப்ரமோட் செய்யும் வகையில் தான் திடீரென அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 

முன்னதாக ஹாட்ஸ்டார் ஒரு படத்தை வெளியிட்டு, அதை யார் என்று கண்டு பிடிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்த்து. அந்த படத்தில் இருந்தவர் வேறு யாரும் இல்லை. நம்முடைய அஞ்சலி தான். 
நாளை டிசம்பர் 9ந்தேதி அந்த தொடர் வெளியாக உள்ளது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.