audio converter, Free software, software, இலவச மென்பொருள்கள்

ஆடியோ கர்வர்ட் செய்திட இலவச மென்பொருள் | Free Audio Converter

Update: 04-01-2020

 இன்று ஆடியோ ஃபைல்களில் நிறைய ஃபார்மட்கள் வந்து விட்டன. ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுவது அவசியமாகிவிட்டது. உதாரணமாக ஆப்பிள் நிறுவனம் தனக்கென பிரத்யேகமாக .aff  .alac  என்ற ஆடியோ பார்மட்களை உருவாக்கி வெளியிட்டுள்ளது. அந்த ஃபைல்களை சப்போர்ட் செய்யும் டிவஸ் உங்களிடத்தில் இருந்தால் மட்டும் அதுபோன்ற ஆடியோவை கேட்க இயலும். அல்லது அந்த பார்ட்டிலிருந்து பொதுவாக பயன்படுத்தக்கூடிய MP3 வடிவத்திற்கு மாற்றி கேட்க முடியும்.

அதுபோல SONY, MICROSOFT, YAMAGA, SAMSUNG, AMAZON போன்ற இன்னும் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட Audio format கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவற்றைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள Audio formats என்ற இந்த தொடுப்பின் ஊடாக சென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அதுபோன்றுள்ள ஆடியோ வகைகளிலிருந்து நம்முடைய சாதனத்தில் கேட்பதற்கு உகந்த்தாக மாற்றிக்கொடுக்கும் மென்பொருள் தாள் “ஆடியோ கன்வர்டிங் மென்பொருள்”.

ஆன்லைன் ஆடியோ கன்வர்டிங் டூல்ஸ்: 

மென்பொருள் தரவிறக்கம் செய்யாமலேயே ஆன்லைனில் மிக சுலபமாக ஒரு ஆடியோவை தரவேற்றி, அதை வேண்டிய பார்மட்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். அந்த வகையில் முதன்மையாக இருப்பது  NCH நிறுவனம் வழங்கு ஆடியோ கன்வர்டிங் வசதிதான்.

தொடுப்பு: NCH AUDIO CONVERTING

NCH AUDIO CONVERTING SOFTWARE

இதே இணையத்தளத்தில் மென்பொருள் டவுன்லோட் செய்து, நிரந்தரமாக கணினியிலிருந்தே ஆடியோ தொகுப்புகளை பதிவேற்றி வேண்டிய FORMAT டிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் மூலம்,

Convert from: .3GA, .3GP, .AAC, .AC3, .ACT, .RCD, .RED, .AIF, .AIFF, .AIFC, .AMR, .APE, .AUP, .AU, .ASF, .AVI, .CAF, .CDA, .DART, .DCT, .DS2, .DSS, .DTS, .DVF, .FLAC, .FLV, .GSM, .M2A, .M3U, .M4A, .M4B, .M4R, .MID, .MKA, .MKV, .MOD, .MOH, .MOV, .MP1, .MP2, .MP3, .MP4, .MPA, .MPC, .MPEG, .MPGA, .MPG, .MPEG, .MSV, .OGA, .OGG, .OPUS, .PLS, .QCP, .RA, .RAR, .RAW, .REC, .RSS, .SHN, .SPX, .VOB, .VOC, .VOX, .WAV, .WMA, .WMV, .WPL, .WV, .ZAB, .ZIP

என்பன போன்வற்றிலிருந்து,

Convert to: .AAC, .AC3, .AIF, .AIFF, .AIFC, .AMR, .APE, .AU, .CAF, .CDA, .FLAC, .GSM, .M3U, .M4A, .M4B, .M4R, .MOV, .MP1, .MP2, .MP3, .MPC, .OGG, .OPUS, .PLS, .RAW, .RSS, .SPX, .TXT, .VOX, .WAV, .WMA, .WPL

பார்மட்களில் மாற்றிட முடியும்.

இந்த மென்பொருள் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 1. ஒன்று இலவசமாக (வசதிகள் குறைவு)
2. மற்றொன்று கட்டணம் செலுத்தி பெறுதல் (முழுமையான வசதிகள் கொண்டது)

ஆடியோ கன்வர்ட்டர் & மெர்ஜர்

இந்த மென்பொருள் மூலம் உங்களுக்கு வேண்டிய ஆடியோக்களை வேறு ஒரு பார்மட்டிற்கு மாற்றுவதுடன், உங்களிடம் உள்ள பாடல்களை Masala Songs, Cut Songs போன்று மாற்றி ஒன்றுடன் ஒன்றை இணைத்து ஒரே பாடலாக மாற்றிக்கொள்ள முடியும்.இது Audio Converter ஆகவும், Audio Merger ஆகவும் செயல்படுகிறது.

தொடுப்பு: Audio Converter & Merger

audio converter and merger for free

இந்த இணைய உலகத்தில் என்ன நினைத்தாலும் அதை சாதிக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.. ஆம் நண்பர்களே.. நமக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் இணையத்தைப் பயன்படுத்திப் பார்க்கையில் பல வித அனுபவங்கள் ஏற்படுகிறது..அப்படிப்பட்ட இணையத்தில் உலவி கொண்டிருக்கும்போது இந்த அற்புதமான மென்பொருளையும் காண முடிந்தது.

இப்போதெல்லாம் கிட்ட தட்ட அனைவரின் கைகளிலும் மொபைல்போன்கள் கொஞ்சி விளையாடுகின்றன. அதுவும் ஜாவா சப்போர்ட்ட் போன்கள், ஐபேட், ஐபோட், ஆண்ட்ராய்டு மொபைகளையே பெரும்பாலும் பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர். அதிலுள்ள மெமரி கார்டுகளின் கொள்ளவோ விண்ணையும் எட்டிவிடும் அளவுக்கு இருக்கு..

1GB, 2GB, 4Gb யிலிருந்து 8 GB, 16 GB என்று போய்க்கொண்டே இருக்கிறது.. இதில் நாம் பெருமளவு படங்கள், பாடல்களையே வைத்திருக்கிறோம்.. அதுவும் நமக்குப் பிடித்தமான சினிமா பாடல்கள் அதிகளவு வைத்திருக்கிறோம்..

நீண்ட நெடுந்தூர பயணத்தின்போது அப்படி ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்டுக்கொண்டே பயணிப்பது என்பது அலாதியான சுகம்தான்.. !!

இன்னும் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்ட வித்தியாசமான பாடல்கள் என்றால் அதைவிட சுகம்..

இதற்கும் ஒரு படி மேல் போய் நமக்கு விருப்பமானவர்களின் உரையாடல்கள், குரல்கள் இவற்றை கேட்பதென்றால் அதைவிட சுகமாக இருக்குமல்லவா?

நாம் ரெக்கார்ட் செய்த ஆடியோ கோப்புகள் சிறு சிறு கோப்புகளாவே இருக்கும். ரெக்கார்ட் செய்து வைத்திருப்போம். அப்போது செய்து வைத்திருந்த இந்த சிறிய சிறிய கோப்புகளை ஒன்றினைத்து ஒரே கோப்பாக மாற்றினால் இடமும் மிச்சம். தொடர்ந்தாற் போல் கேட்டுக்கொண்டும் இருக்கலாம் அல்லவா?

இதற்கெல்லாம் பயன்படும் விதமாக இருக்கும் இம் மென்பொருளை அறியத் தருவதில் மிக்க மகிழ்ச்சி. பதிவைப் படியுங்கள்.. மென் பொருளைப் பயன்படுத்தி உங்கள் கருத்தை நிச்சயம் கூறுங்கள்..!

நீங்கள் ஒரு சில பாடல்களை கேட்டிருப்பீர்கள். தொடர்ச்சியாக வெவ்வேறு பாடல்கள் இடைவெளி இல்லாமல் ஒலிக்கும். ஒரே மெட்டில் உள்ள வெவ்வேறு பாடல்கள் ஒன்றாக இணைத்திருப்பார்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும்.

உங்கள் ரசனைகளுக்கேற்ப நீங்களும் அவ்வாறு பாடல்களை இணைக்கலாம். தேவையில்லாத வரிகைகளை நீக்கலாம். நீண்ட இசை கொண்ட பாடல்களிலிருந்து இசையை மட்டும் தனியே பிரித்தெடுக்கலாம்..

Audio File களை கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள் freemp3wmaconverter!!

பல்வேறு பார்மட்களிலிருந்து வேண்டிய பார்மட்டிற்கு உங்கள் ஆடியோ பைல்களை மாற்றம் (Audio conversion)செய்ய இந்த புதிய மென்பொருள் freemp3wmaconverter பயன்படுகிறது.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி Mp3, wma, wav,ogg பார்மட்களிலுள்ள பாடல்களை சுலபமாக ஒன்றிணைக்கலாம்.

உங்கள் ரசனைகளுக்கேற்ப பழைய புதிய பாடல்களை இணைத்து ஒரு புதுவித பாடல்களையும் உருவாக்கலாம். உங்கள் குரல்களையும் பாடல்களினூடே இணைக்கலாம்.

உங்களுக்குப் பிடித்தமானவர் பேசியதை உங்கள் மொபைகளில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து வைத்திருப்பதை , வித்தியாச சத்தங்களை இப்படி எது வேண்டுமானாலும் உங்கள் வசதிக்கு தக்கபடி மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் புதிதாக மாற்றி அமைத்த Audio பைல்களுக்கு Dual channels, Stereo quality, Mono, Bit rate Joint Stereo, High quality போன்ற எஃபக்ட்களையும் கொடுக்கலாம்.. உருவாக்கிய பைல்களை குறைந்த மற்றும் அதிகளவாகவும் மாற்றம் செய்யவும் ஒரு ஆப்சன் இருக்கிறது. நீங்கள் உருவாக்கிய பைல்களை Low quality, high quality என இருவகைகளில் சேமிக்க முடியும்.

உருவாக்கிய பாடங்களை வரிசைமாற்றம்(order) செய்யலாம். பயன்படுத்த எளிதான இந்த மென்பொருள் நமது விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது..

என்ன நண்பர்களே நீங்களும் உங்களது ஆடியோ கோப்புகளை கன்வர்ட் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

http://www.freemp3wmaconverter.com/audioconvertmergefree/index.html

பயன்படுத்திப் பாருங்கள்..! உங்கள் கருத்தை எமக்கு எழுதுங்கள்.. இந்த மென்பொருளைப் பற்றி சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்..