Android, android tips

ஆன்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களா? முதலில் இதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள் !

android phone users making mistake


ஆன்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர் அனைவரும் அதை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆன்ட்ராய்ட் போன் அனைவரும் பயன்படுத்தும் யூசர் ப்ரண்டிலியாக எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே போல அதை சரியாக பயன்படுத்தாத நிலையில் அதிக தொல்லை தரும் போனாகவும் அது மாறிவிடும்.

புதிய ஆன்ட்ராய்ட் பயனர்கள் பொதுவாக செய்யும் சில தவறுகள் உண்டு.

1. லைவ் பேக்ரவுண்ட்

போனில் பார்ப்பதற்கு அட்ராக்சனாக இருப்பதாக நினைத்துக்கொண்டு லைவ் பேக்ரவுண்ட் வைத்திருப்பார்கள். இதனால் போனின் வேகம் குறைவதோடு, தேவையில்லாத மின்சாரமும் செலவாகும். (Battery Charge).

2. சீப் மெமரி கார்டு யூஸ் பண்ணாதீங்க

இப்பொழுது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போனில் அதிகமான Internal Memory இருப்பதில்லை. அதை சமாளிக்க SD memory card பயன்படுத்துவீர்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அந்த “மெமரி கார்டு” தரமானதாக இருக்க வேண்டும். Class 4, Class 6 கார்டுகளை விட, Class 10 மெமரி கார்டுகள் தரமானதாக இருக்கும். அதிவேகமாகவும் செயல்படும். ஆனால் அதன் விலை சற்று அதிகம்தான்.

3. ஆன்ட்டி வைரஸ் தேவையா?

ஆன்ட்ராய்ட் போனில் அதிகமான ஆன்ட்டி வைரஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதனால் பயன் ஏதும் பெரிதாக இருக்க போவதில்லை. அதற்கு பதிலாக உங்களுடைய ஆன்ட்ராய்ட் போனுக்கு சில நல்லதுகளை செய்யலாம்.

தேவையில்லாத அப்ளிகேஷன்களை நிறுவாமல் இருப்பது. நம்பகத் தகுந்த அப்ளிகேஷன்கள் என உறுதிபட தெரிந்த பின்பு அவற்றை இன்ஸ்டால் செய்வது, மெசன்ஜர் ஆப்ஸ்களில் வரும் லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பது, சந்தேகத்திற்கு இடமான வெப்சைட்களை பார்வையிடாமல் இருப்பது போன்றவைகளை செய்தாலே போதுமானது.

4. ஆப்ஸ் பர்மிசன்களை புரிந்துகொள்ளுங்கள்

பெரும்பாலான அப்ளிகேஷன்கள் தங்களுக்கு தேவையில்லாத அனுமதிகளை கேட்கும். அப்படி அனுமதி வேண்ட எண்ண காரணம்? என்ன பிரச்னை அதில் ஒளிந்துள்ளது? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.  இவற்றைப் பார்க்க Settings > Applications > Select Apps பாருங்கள். அதில் தேவையில்லாத அனுமதிகளை பெற்றிருக்கும் அப்ளிகேஷன்களை செலக்ட் செய்து Deny கொடுத்துவிடுங்கள்.

5. ஓவர் சார்ஜ் உடம்புக்கு ஆகாது

ஸ்மார்ட் போனுக்கு சார்ஜ் செய்கிறேன் பேர்வழி என்று அதிக நேரம் சார்ஜ் போட்டால் அதிக பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று தவறாக நினைத்து சார்ஜ் போடுவது ஆபத்துக்கு வழி வகுக்கும். ஸ்மார்ட் போன் பேட்டரி எவ்வளவு நேரம் சார்ஜ் செய்ய வேண்டுமோ.. அந்தளவுக்கு சார்ஜ் செய்தால் போதுமானது.

6. பேட்டரி ஆப்டிமைசேசன் அப்ளிகேஷன் தேவையா?

பேட்டரி ஆப்டிமைசேசன் செய்யும் அப்ளிகேஷன் என்ன செய்யும்? தேவையில்லாத பேக்கரவுண்ட் ஆப்ஸ்களின் செயல்பாட்டை நிறுத்தும். ப்ளூடூத், இன்டர்நெட், வைஃபை போன்றவற்றை பயன்படுத்தாத போது நிறுத்தும். இதையெல்லாம் அந்த அப்ளிகேஷன் பின்னணியில் இயங்கியவாறுதான் செய்யும்.  அதை நீங்களாகவே செய்துவிடலாம். இதனால் “Battery Optimization” ஆப் எடுத்துக்கொள்ளும் மின்சக்தி, இடம் மீதமாகும்.

7. கொஞ்சம் ஓய்வு கொடுங்களேன்.. என்ன கொறஞ்சா போய்டுவீங்க?

சதா எந்நேரமும் ஸ்மார்ட் போனை தொந்தரவு செய்யாமல் குறிப்பிட்ட கால அளவு அதற்கு ஓய்வு அளிக்கலாம். இதனால் ஸ்மார்ட் போனில் செயல்பாடு “சுறு சுறுப்பாக” இருக்கும்.

கொசுறுகள்:

இவற்றை எல்லாம் செய்திட்ட பிறகு மேலும் சிலவற்றை செய்யலாம். நம்பகத்தன்மை இல்லாத வெப்சைட்களிலிருந்து ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மூன்றாம் தர வெப்சைட்களில் நிறைய APK பைல்கள் ஒரிஜினல் போன்ற தோற்றத்திலே இருக்கும். உங்களுடைய சுய நலத்திற்காக அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தினால் உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிக் கொட்டிக் கொண்ட மாதிரிதான்.

அப்புறம் ஷாம்பு போட்டுதான் கழுவ வேண்டும். அதாங்க தேவையில்லாத வைரஸ் தொந்தரவுகள் போன்றவைகளை சந்திக்க நேரிடும்.