apple, apple iPhone 7 tips., apple iPhone Tips, iphone, mobile tips

ஆப்பிள் iPhone 7 பயன்படுத்திட டிப்ஸ் !

ஆப்பிள் ஐபோன் விலை அதிகம். தரம் உயர்தரம். அதிக விலை கொடுத்து வாங்கிய iPhone 7 பயன்படுத்துவதில் கூட சில சிக்கல் உண்டு. சில செட்டிங்ஸ்களை செய்வதன் மூலம் அந்த பிரச்னைகளை சுலபமாக தீர்த்திடலாம். “ஆப்பிள் ஐபோன் 7” பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. பின்பற்றினால் Apple iPhone 7 பயன்படுத்துவது எளிது.

apple iPhone settings

1. டெக்ஸ் மெனுவை போல்டாக்குல் (Make the menu text bolder)

புதிய iOS இயக்க முறைத் தோற்றமானது பார்ப்பதற்கு ஓரளவிற்கு சுமாராக இருக்கும். அதை சூப்பராக மாற்ற கீழ்கண்ட செட்டிங்ஸ் செய்திடுங்கள். அப்படி செய்வதன் மூலம் System Menu மற்றும் Features களை பெரியதாக மாற்றிடலாம்.

ஐபோனில், 

  • Settings என்பதை தட்டுங்கள்..
  • General என்பதை தட்டுங்கள்…
  • Accessibility என்பதை தட்டுங்கள்..
  • Bold Text என்பதை உயிர்ப்பியுங்கள்…
அவ்வளவுதான். இப்பொழுது உங்களது ஆப்பிள் சாதனம் Restart ஆகும். பிறகு உங்களது ஆப்பிள் போனில் features மற்றும் text மெனுக்கள் நன்றாக தெளிவாக காட்சியளிக்கும்.

2. வேண்டாத எண்களை பிளாக் செய்வது (Block phone calls frm idividual numbers)

குறிப்பிட்ட போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளை நீங்கள் தடை செய்ய முடியும். இந்த வசதியை செயல்படுத்த,
  • Phone app திறக்கவும்.
  • திரையில் கீழுள்ள Recents டேபை தட்டவும்.
  • சிறிய “i” என்பதை தட்டி உங்களுக்கு வந்த அழைப்பு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்…
  • அந்த பக்கத்தை Scroll down செய்யவும்.
  • இறுதியில் Block this Caller என்பதை தட்டவும்.

3. வேண்டாத அப்ளிகேஷனை பிளாக் செய்வது.. (Black unnecessary Apps cellular data)

உங்கள் ஆப்பிள் ஐபோன் அல்லது ஐபேட்டில் உள்ள வேண்டாத அப்ளிகேஷனை நீக்க புதிய Apple iOS 7 System வழிவகுக்கிறது. உங்களுடைய இண்டர்நெட் பில்லை எகிற செய்யும் வேண்டாத அப்ளிகேஷனை கண்டறியும் வகையில் இதில் வசதிகள் உள்ளது. ஒவ்வொரு அப்ளிகேஷனும் எவ்வளவு டேட்டாவை பயன்படுத்துகிறது என இந்த புதிய சிஸ்டம் வரிசைப்படுத்திக் காட்டும். 
அதிலிருந்து உங்களுக்கு வேண்டாத அல்லது அதிகம் பயன்படுத்தாத, அல்லது பயனில்லாத அப்ளிகேஷனை நீக்க முடியும். 
அதற்கு, 
settings என்பதை தட்டவும்.
  • Cellular என்பதை தட்டவும்.
  • Scroll Down செய்யவும்.
  • Use Cellular Data For என்ற தலைப்பின் கீழாக…
  • நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை ஒவ்வொன்றும் எவ்வளவு டேட்டாக்களைப் பயன்படுத்துகின்றன என்பதை வரிசைப்டுத்தி காட்டும். 
  • வேண்டாத அப்ளிகேஷனை “Off” கொடுத்துவிடுங்கள்..
  • இனி ஆப் செய்த அந்த அப்ளிகேஷன் இன்டர்நெட் அணுகலை மேற்கொள்ளாது. 

Tags: apple, ios, ios7, apple ios7, smartphone tips, smartphone, tips and tricks, tips for apple ios7 users, basic tips for apple ios7 system users.