Q&A, Technology

இப்போது கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் 2 வருடங்கள் கூட வருவதில்லையே ஏன்?

smartphone life

இப்போது சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் 2 வருடங்கள் கூட முழுமையாக வாழ்நாள் வருவதில்லையே அது ஏன்? இந்த கேள்விக்கு சரியான விடைதான் இப்பதிவு.  உதாரணமாக சாம்சங் என்ற பிராண்டில் J1, J2, J3, J4, J5, J6, J7 என J தொடர் மாடல்கள் மட்டும் நீளும் இதை விட S1, S2…. எனவும் A10, A15, A20, A30… என வேறு வோறு தொடர்கள் வெளிவரும்.

இதில் J7 என்ற மாடலை மட்டும் எடுத்துக்கொண்டால் J7, J7 2016, J7 2017, J7 2018, J7 Next, J7 Pro, J7 Prime, J7 Next, J7 Max என அநத மாடலின் வகைகள் மட்டும் நீளும்.

j7 samsung smartphone

இதில் ஏதாவது ஒரு மாடல் போனின் பேட்டரி அல்லது டிஸ்பிளே பழுதாகி மாற்ற வேண்டி வந்தால் அந்த போன் உற்பத்தயில் இருக்கும் வரை அந்த பொருள் அந்த நிறுவனத்தில் கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு போன் மாடல் புதிதாக சந்தைக்கு வருவதால் ஏற்கனவே விற்பனை குறைவடையும் இன்னொரு மாடல் போன் உற்பத்தி நிறுத்தப்படும்.

ஒவ்வொரு மாடலுக்கும் கமெராவின் தரம், மின்கலத்தின் கொள்ளளவு, RAM, Storage, தொடுதிரை அளவு மற்றும் வடிவம் என பல தொழிநுட்ப விடையங்கள் வேறுபடும்.

இங்கு நான் குறிப்பிட்டது சாம்சங் என்ற ஒரு பிராண்ட் மட்டுமே, இதைவிட ஒப்போ, வீவோ, ரெட்மி, ஒன்ப்ளஸ், ஐபோன், ஐடெல், லாவா, இன்டெக்ஸ், கூகிள் பிக்செல். ஹுவாவே, டூகி, நோக்கியா, ஏசர், எல்ஜி, இம்மோ என பல பிராண்ட்கள் சந்தையிலுண்டு.

அப்போ எத்தனை மாடல் தேர்வுகள் வாடிக்கையாளர்கள் முன்னால் உள்ளது?

இந்த காரணங்களால் ஒரு போனின் பாகங்கள் கிடைப்பது அரிதானதாக இருக்கும்.

இரண்டு வருடங்களில் ஒரு போன் பல தடவை கீழே விழுந்திருக்கும்.

பவர்பாங், தரமற்ற சார்ஜர்களில் அவசரத்துக்கு சார்ஜ் போடுவதால் பட்றரி அதன் நீடித்த பாவனை நேரத்தை இழந்திருக்கும்.

வட்சப், வைபர், ஐஎம்மோ, பிரவுசர் History ஊடக படங்கள் காளொளிகள், அரட்டை தரவுகள் சேமிப்பகத்தில் தேங்கி விடுவதால் மொபைல் வேகம் குறைந்து Struck ஆகிக்கொண்டிருக்கும்.

இடி மின்னல், மின்சாரம் சீரற்ற சமயங்களில் சார்ஜரில் போன் இருக்கும் போது சார்ஜர் பின் பழுதடைய வாய்ப்புள்ளது.

இதை விட வியர்வை, மழை தூறல், குளிர் காற்றிலுள்ள ஈரலிப்பு போன்றவை உட்புகுந்து மதர் போர்டு சர்க்கிட் துருப்பிடித்து மின் ஒழுக்கு ஏற்படும்.

இதில் ஏதோ ஒன்றோ பலவோ இரண்டு வருடங்களுக்குள் ஏற்பட்டு விடுகிறது.

தவிர இந்த போன்கள் 95 வீதம் சீனாவில் தயாராகின்றன. போனின் விற்பனை விலையை விட நான்கு மடங்கு குறைவாக அதன் உற்பத்தி செலவு இருக்கும். அப்போ அதனுள் இருக்கும் பாகங்களின் பெறுமதியையும் தரத்தினயும் எண்ணிப்பார்க்க முடிகிறதா?

ஆக இரண்டு வருடங்கள் பாவிப்பதே பெரிய விடயம். இப்போது கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் 2 வருடங்கள் கூட வருவதில்லை என்பதற்கு மேற்கண்ட விடயங்களே காரணம். இப்போது உங்களால் விளங்கிகொள்ள முடிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.