olympic 2012 china

ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக காண…

வணக்கம் நண்பர்களே..! தொடர்ந்து பதிவெழுத எனக்கு நேரம் கிடைக்கல.. இப்போ ஒலிம்பிக் போட்டிகள் இலண்டன்ல நடந்துட்டு இருக்கு இல்லையா? இந்தப் போட்டிகளை வீட்டிலிருந்தால் டி.வியில பார்த்துக்கிடலாம்.. அலுவலகத்தில் இருந்தால் எப்படி பார்ப்பது?

கணினியில பார்க்கலாம்.. இல்லேன்னா இருக்கவே இருக்கு smartphone. இணையத்துல Olympic போட்டிகளைப் பார்க்க எத்தனையோ  வழிமுறைகள் இருக்கு.. அதில் ஒரு சிலவற்றை மட்டும் உங்களோட பகிர்ந்துக்கிறேன்…


நானும் இப்படிதான் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துட்டு இருக்கிறேன்..

நான் என்னோட ஸ்மார்ட்போன்(Android) மூலமாகவும் பார்க்கிறேன். அதாவது எனக்குப் பிடித்த போட்டி எந்த நேரத்தில நடந்தாலும் அதைப் பார்த்துடனும்.. அதுதான் என்னோட விருப்பம்…

கணினியில் பார்க்க

இன்டர்நெட்ல பார்க்கணும்னா Youtube தளமே அதுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கிறாய்ங்க..

இலண்டன் ஒலிம்பிக் 2012(LONDON OLYMPIC 2012)

இந்த இணைப்பைக் கிளிக் செய்து பார்த்து மகிழுங்க..

Smartphone (iphone, android)-ல் பார்ப்பதற்கான சுட்டிகள்:

இந்த இணைப்பை கிளிக் செய்து பார்த்துடுங்க..

1. BBC Olympics
2. BBC Olympics

இந்தியா பதிக்க பட்டியலில் பின் தங்கி இருந்தாலும், மற்ற நாடுகள் என்ன செய்கிறது.. எத்தனை தங்கம், எத்தனை வெள்ளி, பதங்கள் வாங்கியிருக்கு? நம்முடைய வீர்ர்கள் எப்படி சொதப்பி வாய்ப்பை நழுவ விடறாங்க-ங்கிறதை எல்லாத்தையும் இப்போ ஆபிசிலிருந்தே live ஆ பார்த்துக்கலாம்..

இன்னொரு தளமும் உபயோகமா இருக்கும். ஆனால் அதுக்கு நீங்க அமெரிக்காவில இருக்கணும்.. அந்த தளம் NBC

இந்த தளத்தைப் பத்தி ஒரு பதிவே எழுதலாம். இதுல நிறைய வசதிகள் இருக்கு. அதை நேரமிருக்கும்போது பார்ப்போம்.. இப்போதைக்கு மிச்சம் மீதி இருக்கிற ஒலிம்பிக்(Olympics) போட்டிகளை எல்லாம் பார்த்து ரசிங்க…

அப்படியே இந்த வீடியோவை பாருங்க..: பிடிக்கலேன்னா அடுத்த பாராவுக்கு தாவிடுங்க..

(Olympic) ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கன்னு தலைப்பு போட்டு இவ்வளவு லேட்டா ஏன் எழுதியிருக்கீங்கன்னு நீங்க கேட்கலாம்.. நான் நெனைச்சபோது எழுத நேரம் கிடைக்கல…இப்போ நேரம் கிடைச்சது எழுதிட்டேன்…அடுத்து ஒரு புது சாப்ட்வேர் நீங்களே எழுத உங்களுக்கு கத்து தர்றேன்.. இதுக்கு நீங்க தொழில்நுட்பம் படிச்சிருக்கணும், அதிகம் படிச்சிருக்கணும், இங்கிலீஸ் தெரிஞ்சிருக்கணும் அவசியமில்லீங்க..

தேவை மூணு தகுதி..

1. அ,க,ங,ச .. படிச்சிருக்கணும்..
2. A,B,C படிச்சிருக்கணும்…
3. அடுத்து பார்த்தா கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண தெரியனும்.. அவ்வளவுதான்..

இந்த மூணு தகுதியும் இருந்தால் நீங்களே ஒரு சாப்ட்வேர் எழுதி அசத்தலாம்.. அதை நாளைக்குப் பார்ப்போமே…!

2 Comments

Comments are closed.