Uncategorized

கணினியில் 50 பிரச்னைகளைத் தீர்க்கும் மென்பொருள்

வணக்கம் நண்பர்களே.. சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டது..

எனக்கும் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற விருப்பமே. என்றாலும் அதிக பணிச்சுமை காரணமாக எழுத முடிவதில்லை.. பதிவிற்கு வருவோம்…

நண்பர்கள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் எக்ஸ்பி என அனைத்து இயங்குதளங்ளையும் பயன்படுத்தியிருப்பீர்கள்..!

இவற்றில் இணைய இணைப்பு கொண்ட கணினிகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் (Virus, Malware, Spyware) ஆகியவைதான்.

a software fix 50 problems in pc

கணினியில் ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள்: 

1. Windows Explorer, 2. Internet Connection Problem, 3. Media Player, 4. Explorer.exe Problem, 5. Recycle Bin, 6. Disk Drive Problem, 7. Auto Run Problem

கூடவே சில செட்டிங்ஸ் (Settings Problems) பிரச்னைகளும் வரும். இதுபோன்று கணினியில் ஏற்படும் 50 வகையான பிரச்னைகளை மற்றவர்கள் துணையின்றி நாமே சரி செய்ய முடியும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆம் நண்பர்களே.. இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய பயன்படுகிறது ஒரு சிறிய மென்பொருள். WinFix என்ற இந்த Freeware மூலம் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்னைகளை மிகச் சுலபமாக ஒரே கிளிக்கில் சரி செய்திடலாம்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதற்கு சொடுக்குங்கள்:
http://www.thewindowsclub.com/downloads/FixWin.zip

175kb குறைந்த அளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது சுலபம்.

சிறிய சிறிய பிரச்னைகளைக்கு கணினி சரி செய்பவரை நாடாமல், நீங்களே இந்த மென்பொருள் மூலம் சுலபமாக சரி செய்து விடலாம்.

நன்றி நண்பர்களே..!

– சுப்புடு

2 Comments

Comments are closed.