anti virus software, ccleaner, Free software, இலவச சாப்ட்வேர், இலவச மென்பொருள்கள்

கணினியை காக்க மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய c cleaner!!

கணினியை சுத்தம் செய்ய லேட்டஸ்ட் சி கிளீனர்..!

C_cleaner logoபெரும்பாலான கணினி பயனர்கள் தங்கள் கணினியை சுத்தப்படுத்த பயன்படுத்தும் சிறந்த மென்பொருள் இந்த சி கிளீனர் தான். இதனைப் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் தான் உலகில் பெரும்பாலானவர்கள் இந்த மென்பொருளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

இம்மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

1. அளவில் சிறியது. 3.3MB மட்டுமே
2. முற்றிலும் இலவசம்
3. எளிமையான நேரிடையான தரவிறக்கம்

4. கையாள்வது மிகவும் எளிது.
5. தேவையில்லாத பைல்களை அழிக்கும் திறன்.
6. குறைந்த நேரத்தில் செயல்படும் விதம்.
7. வேகமாக இயங்கக்கூடியது.
8. கணியின் பணிச்சுமை குறைகிறது.
9. கணினி வேகமாக செயல்படுகிறது.

இத்தனைக்கும் மேலாக இம்மென்பொருளை தரவிறக்க நாம் அந்த தளத்தில் கணக்கு எதுவும் தொடங்க அவசியமில்லை.

பயன்படுத்துவது எப்படி?

தறவிறக்கம் செய்தவுடன் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவியவுடன் கீழிருக்கும்படி ஒரு விண்டோ திறக்கும்.

அதில் Analyze என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடனேயே

c_cleaner_prossing_image

தானாகவே தேவையற்றப் பைல்களை Analyze செய்து காண்பிக்கும். பிறகு அருகில் இருக்கும் Run cleaner என்ற பட்டனை இயக்கினால் தேவையாற்ற பைல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு cleaning comeplet  என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கும். இப்போது உங்கள் கணினி புதுப்பொலிவு பெற்றிருக்கும். .

இதேபோல் Registery , windows ஐயும் கிளீன் செய்துகொள்ளலாம்.

மற்றுமொரு பயனும் உள்ளது. மேலே இருக்கும் windows என்ற பட்டனை அழுத்தியவுடன் நமது கணினியில் நிறுவியிருக்கும் மென்பொருட்களின் பட்டியலைக் காட்டும்.  நாம் அவ்வப்போது சோதனைக்காக சில மென்பொருட்களை பதிவிறக்கி, நிறுவி வைத்திருப்போம்.  அத்தகைய  மென்பொருட்கள் ஒரு சிலவற்றை பயன்படுத்தாமலேயே வைத்திருப்போம். இம்மென்பொருட்களை நாமாக uninstall செய்தால் அதைச் சார்ந்த ஒரு சில கோப்புகள் இன்னும் நம் கணினியில் தங்கி இருக்கும். இதை தவிர்க்க c கிளீனர் கொண்டு unintall  செய்தால் தேவையற்ற மென்பொருட்களை நம் கணினியிலிருந்து எளிதாக எந்த ஒரு சுவடும் இல்லாமல் அகற்றலாம்.

இதனால் உங்கள் கணனியின் வேகம் கூடுவதோடு , கணியும் பாதுகாப்பப்படுகிறது. உங்கள் வலை உலவாயின் வேகமும் கூடுகிறது.

c cleaner தரவிறக்க இங்கு செல்லவும்: http://www.piriform.com/ccleaner/builds

Standard version தரவிறக்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும்:

http://static.piriform.com/pf/download.png

*****

portable version : தரவிறக்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும் :

http://www.piriform.com/ccleaner/download/portable

பதிவுகள் பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்..!! நன்றி நண்பர்களே..!!

தொடர்புடைய பதிவு: சி கிளீனருக்கான ஒரு external application !!