computer, eye protection, Free software, monitor

கண்கள் சிரமத்திற்கு உள்ளாகமல் இருக்க மென்பொருள்

அலுலகம் முதற்கொண்டு வீடு வரை கணினியை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். டைப்பிஸ்ட், மாணவர்கள், அலுவலர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என அனைத்து தரப்பினரும் அதிக நேரம் கணினியில் செலவழிக்கின்றனர். அதிக நேரம் கணினியை உற்று நோக்குவதால் கண்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன. இதனால் தலைவலி, கண்வலி போன்றவைகள் ஏற்படுவதோடு, கண்கள் அதிகம் களைப்பு அடைகின்றன.  வேலை அல்லது படிப்பில் ஆழ்ந்திருக்கும்போது நம்மை அறியாமல் நீண்ட நேரம் கண்களை திரையிலிருந்து எடுக்காமல் இருப்போம். அவற்றைத் தவிர்த்திட, கண்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் தடுக்க மென்பொருட்கள் சில உள்ளன.

kangal pathu kathidum meporul

கண்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்க மென்பொருள்

அவற்றில் முதன்மையானதும், இரவு பகல் நேரத்திற்கு தகுந்தவாறு தானாகவே கணினி திரையின் வெளிச்சத்தை மாற்றி அமைக்க கூடியதுமான ஒரு அற்புதம் வாய்ந்த மென்பொருள் F.LUX.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொண்டால் போதுமானது. உங்களுடைய பகுதியில் உள்ள கால சூழலுக்கு (வெளிச்சம்) இம்மென்பொருள் உங்கள் திரையை கண்கள் பார்க்க கூடிய அளவிற்கு வெளிச்சத்தை மென்மையாக மாற்றித் தந்துவிடும்.

சில நேரங்களில் உங்கள் வசதிக்கு தகுந்தது போல திரையின் வெளிச்சத்தை மாற்ற வேண்டியிருந்தால், அதற்கான வசதியையும் இம்மென்பொருள் தருகிறது.

ஃப்ளக்ஸ் மென்பொருள் பயன்படுத்துவது எப்படி?

முதலில் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்களுடைய கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

1. Change Settings  செல்லவும்.

2. Adjust Your Lighting For Day And Night: பகல் மற்றும் இரவில் எந்தளவிற்கு மானிட்டரில் வெளிச்சம் வேண்டும் என்பதைத் தெரிந்தெடுக்கவும்.

3. Set Your Location: இதில் Change என்பதை அழுத்தி, தோன்றும் மேப்பில் உங்களுடைய ஊரை தேர்ந்தெடுங்கள். அல்லது மேலிருக்கும் கட்டத்தில் உங்களுடைய பகுதியின் பெயரை டைப் செய்யுங்கள்.

4. Transition Speed: இந்த வசதியானது மானிட்டரின் வெளிச்சம் மாறும் நேரத்தை சிறிது சிறிதாக கூட்டுவதற்குப் பயன்படுகிறது.

(ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மானிட்டரின் வெளிச்சம் திடீரென மாறுவதால் நீங்கள் குழப்பமடைவதை தவிர்க்கவும், கண்களுக்கு ஏற்றவாறு சிறிது சிறுதாக மானிட்டர் வெளிச்சம் குறையச் செய்வதற்கும், அதிகரிக்கச் செய்வதற்கு இந்த வசதி பயன்படும். உங்கள் வசதிக்கு தகுந்தவாறு வெளிச்சம் மாறும் நேரத்தை மாற்றி அமைக்கலாம்.)

விண்டோஸ் கணினிகளுக்கு மட்டுமல்லாமல், லினக்ஸ், மேக் கணனிகளுக்கும் இந்த மென்பொருள் பதிப்பு உள்ளது. எனவே அனைத்து கணினிப் பயனர்களும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திடலாம்.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி:

Eye Strain தவிர்க்க மூக்கு கண்ணாடி அணிந்தவர்கள் கூட இம் மென்பொருளை தங்களது கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். என்ன நண்பர்களே..  , மேலும் கண்கள் சிரமத்திற்கு உள்ளாகமல் இருந்திட மென்பொருள் என்னும் இப்பதிவு  கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன். பதிவு பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான [Sharing Buttons]- பகிர்வு பொத்தான்கள் கீழே உள்ளன.

Tags: Free software for monitor light control, monitor light control automatic software, software for eye protection from pc monitor, automatic light changing software for pc, light changing day and night software for pc, eye protection from computer monitor light. monitor, monitor light control software for computer, linux, mac, windows computer, day light, night light, health tips, eye protection.

2 Comments

  1. ஆண்டிராய்ட்டில் பயன்படும் சில சாப்ட்வேர்களை பட்டியில் தரலாமே.

Comments are closed.