computer tips, computer trick

கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆக நேரம் எடுக்கிறதா? தீர்வு

சில நேரங்களில் என்ன செய்தாலும், கம்ப்யூட்டர் ஷட்டவுன் ஆகாமல்  அப்படியே Hang ஆகி நின்றுவிடும். செய்து கொண்டிருக்கும் வேலை பாதியில் இருக்கும்போது அப்படி நின்றுவிட்டால், செய்த வேலையை சேமிக்க முடியாமல், மெயின் சுவிட்சை ஆப் செய்ய முடியாமல் பரிதவித்துதான் போவோம்.

சரி, அப்படியே மெயினை Off செய்யலாம் என்றால், அதுவரைக்கும் செய்த வேலைகள் அனைத்தும் சேமிக்க முடியாமல் வீணாகிவிடும். அப்படிச் செய்வதால் செய்த வேலைகள் சேமிக்க முடியாமல் போவதோடு, கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆவதற்கும் வாய்ப்புகள் உருவாகிவிடும்.

fix computer shutdown problem

அது போன்ற நிலைக்கு என்ன காரணம்? நிச்சயமாக கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு புரோகிராம் Hang ஆவதுதான். அவ்வாறு ஆவதால் தான் கம்ப்யூட்டரை நிறுத்த முடியாமல் போகும் சூழல் உருவாகும். அதை தீர்க்க வேண்டும் எனில் பிரச்னைக்கு உரிய புரோகிராம் எது என அறிந்து, அதை நிறுத்திய பிறகு, வழக்கம் போக கம்ப்யூட்டரை நிறுத்திவிடலாம்.

எப்படி Hang ஆன புரோகிராமை கண்டுபிடிப்பது? 

அதைக் கண்டுபிடிப்பதற்கென Tools உண்டு. அவற்றைப் பயன்படுத்தி எளிதாக எந்த புரோகிராம் Hang ஆகிறது என கண்டுபிடிக்கலாம். Process Hacker என்ற புரோகிராம் அந்த வேலையை மிகச் சரியாக செய்கிறது. அது மட்டுமில்லாமல் கணினி பிழைகள் கண்டறியவுஃ, மல்வேர் கண்டறியவும் இந்த டூல் (Tool) உதவுகிறது.

Process Hacker புரோகிராமை டவுன்லோட் செய்ய சுட்டி:

Tags: Computer Tips, Shutdown Problem, Program Hang, Process Hacker