Bookmarks Backup, browser tips, google chrome

கூகிள் குரோம் பிரௌசரில் புக்மார்க்ஸ் பேக்கப் செய்வது எப்படி?

இணையத்தில் உலவும்பொழுது நமக்கு பயன்மிக்க வலைத்தளப் பக்கங்களை அவ்வப்பொழுது சென்று பார்த்திட வேண்டி அதை “புக்மார்க்” செய்து வைத்திருப்போம். அவ்வாறு BookMark செய்யப்பட்ட பக்கங்களை எப்படி “பேக்கப்” எடுப்பது என்பதை தெரிந்துகொள்வோம்.

how to backup bookmarks in chrome

பிரௌசரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அதை அன்-இன்ஸ்டால் செய்திடுகையில் அதில் உள்ள புக்மார்க் செய்யப்பட்டவைகள் அனைத்தும் அழிந்துவிடும். எனவே தான் அவற்றை பத்திரமாக சேமித்து வைத்து, மீண்டும் அவற்றை பயன்படுத்திட “புக்மார்க் டவுன்லோட்” அவசியம்.
குரோம் பிரௌசரில் புக்மார்க் பேக்கப் செய்வது எப்படி?
1. குரோம் பிரௌசரை திறந்துகொள்ளவும்.
2. வலது மேல் மூலையில் உள்ள Customize and Control Google Chrome பட்டனை அழுத்தவும்.
3. அதில் Bookmarks => Bookmark Manager கிளிக் செய்யவும்.
4. தோன்றும் பக்கத்தில் வலது மேல் மூலையில் organize பட்டனை அழுத்தவும்.
5. அதில் Export Bookmarks கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான். இனி, உங்களுடைய புக்மார் அனைத்தும் ஒரு HTML வெப் ஃபைலாக சேமிக்கப்பட்டுவிடும்.
புக்மார்க் பேக்கப் ஃபைலை மீண்டும் பயன்படுத்துவது எப்படி?
அந்த Bookmark Backup ஃபைல் பத்திரமாக வைத்திருந்து மீண்டும், புதிய குரோம் பிரௌசர் நிறுவிய பிறகு, அந்த ஃபைல் மேற்கண்ட முறையை பின்பற்றி Import Bookmarks என்பதினை கிளிக் செய்து மீண்டும் அவற்றை பயன்படுத்திடலாம்.
1. குரோம் பிரௌசரை திறந்துகொள்ளவும்.
2. வலது மேல் மூலையில் உள்ள Customize and Control Google Chrome பட்டனை அழுத்தவும்.
3. அதில் Bookmarks => Bookmark Manager கிளிக் செய்யவும்.
4. தோன்றும் பக்கத்தில் வலது மேல் மூலையில் organize பட்டனை அழுத்தவும்.
5. அதில் Import Bookmarks கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான். இனி உங்களுடைய புக்மார்க்ஸ் பேக்கப் மீண்டும் கூகிள் குரோம் பிரௌசரில் புக்மார்க்காக இணைக்கப்பட்டுவிடும்.

தொடர்புடைய பதிவு: கூகிள் குரோம் பிரௌசரை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Tags: How To, Chrome Bookmark Backup, Bookmarks Import, Bookmarks Export.