google reader, google reader backup

கூகிள் ரீடர் டேட்டா பேக்கப் செய்ய

கூகிள் சில சமயம் தன்னுடைய பயனாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும். அதுபோன்றதொரு அதிர்ச்சிகரமான செய்திதான் கூகிள் ரீடர் சேவையை முற்றிலும் நிறுத்தியது ஆகும். 

கூகிள் ரீடரும் பயனும்

உங்களுக்குப் பிடித்தமான தளங்களின் புதிய செய்திகளை, தகவல்களை, கட்டுரைகளை உடனுக்குடன் படிக்கப் பயன்பட்ட சேவையே கூகிள் ரீடர் (RSS) இதை தமிழில் செய்தியோடை என்றும் அழைப்பார்கள். இச்சேவையின் மூலம் உங்களுக்குப் பிடித்தமான வலைத்தளத்தில் இணைந்து அத்தளங்களில் வெளியாகும் பதிவுகளை படிக்க முடியும்.

இந்த சேவையைதான் தற்பொழுது ஜீலை 1ம் தேதி முதல் கூகிள் நிரந்தரமாக நிறுத்திவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் கூகிள் தன்னுடைய கூகிள் ரீடர் சேவையை நிரந்தரமாக தன்னுடைய சர்வரில் இருந்து அழித்துவிடுவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு அழிப்பதன் மூலம் நீங்கள் ஏற்கனவே RSS மூலம் படித்து வந்த அனைத்து தகவல்களும் அழிக்கப்படுவிடும்.

உங்களுடைய கூகிள் ரீடர் தகவல்களை அழிவிலிருந்து பாதுகாப்பது எப்படி?
கூகிளானது உங்களுடைய RSS Reader கணக்கில் உள்ள அத்தனை தகவல்களையும் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு கடைசி தேதி நாளை (ஜீலை 15).
உங்களுடைய RSS தகவல்களை டவுன்லோட் செய்து, வேறொரு ரீடர் சேவையில் தொடர்ந்து பயன்படுத்த முடியும். 

கூகிள் ரீடர் சேவையின் தகவல்களை தரவிறக்கம் செய்வது எப்படி?

  • உங்களுடைய கூகிள் ரீடர் தகவல்களை தரவிறக்கம் செய்ய  கூகிள் டேக் அவுட் தளத்திற்கு செல்லவும்.
  • Choose service==>Reader என்பதை கிளிக் செய்யவும்.

  • தோன்றும் பக்கத்தில் உங்களுடைய கூகிள் ரீடர் கணக்கின் தகவல்களில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கை மற்றும் அதனுடைய அளவுகளை காட்டும்.
  • பிறகு கீழுள்ள CREATE ARCHIVE என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உங்களுடைய கூகிள் ரீடர் கோப்புகள் ZIP கோப்பாக மாற்றப்பட்டு தரவிறக்கும் வசதியுடன் கிடைக்கும். 

  • இறுதியாக Download என்பதை கிளிக் செய்து உங்களுடை கூகிள் ரீடர் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  •  Download பட்டனை கிளிக் செய்த்தும் மீண்டும் உங்களுடைய கூகிள் கணக்கின் பாஸ்வேர்ட்டை கேட்கும். பாஸ்வேர்ட் கொடுத்து சைன் இன் செய்தவுடன் தரவிறக்கம் தொடங்கிவிடும். 
  •  நாளையே இதற்கு கடைசி நாள் என்பதால் உடனடியாக தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தரவிறக்கம் செய்த Google Reader Data பைலை என்ன செய்வது?

தரவிறக்கம் செய்த கூகிள் ரீடர் தகவல் கோப்பை கூகிள் ரீடரை போன்று உள்ள மற்ற ரீடர்களில் அப்லோட் செய்து பயன்படுத்த முடியும். கூகிள் ரீடருக்கு மாற்று நிறைய ரீடர்கள் உள்ளன. அவற்றை கூகிளே அறிவித்துள்ளது. கூகிள் ரீடருக்கான மாற்று வசதிகள் அளிக்கும் தளங்களை இந்த இணைப்பில் சென்று பார்வையிடலாம்.

உங்களுக்குப் பிடித்தமான ரீடர் தளத்தில் அப்லோட் செய்து அவற்றை நீங்கள் கூகிள் ரீடரைப் போன்றே பயன்படுத்த முடியும்.