actress, cinema, cinema news, photos

கைதி அர்ஜூன் தாசும், நம்ம பூங்குழலியும் சேர்ந்து எடுத்துக்கொண்டு போட்டோ ! என்ன விஷயம் தெரியுமா?

லோகேஷ கனகராஜ் இயக்கதில் வெளிவந்த கைதி திரைப்படத்தில் சூப்பர் டூப்பர் வில்லனாக நடித்தவர் அர்ஜூன் தாஷ். இளம் நடிகரான இவரின் குரலே வில்லத்தனத்தின் உச்சத்தை காட்டுமளவுக்கு காட்டு மிராண்டித் தனமாக இருக்கும். 

அதனைத் தொடர்ந்து அவர் அந்தகாரம், தளபதியின் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 

தற்பொழுது அர்ஜுன் தாஸ், அநீதி உள்ளிட்ட திரைப்படங்களிலும் அடுத்து நடித்து வருகிறார்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து உலக புகழ்பெற்றவர். படத்திற்கு பிறகு பூங்குழலி என்று தான் அழைக்கப்படுகிறார். 

தற்பொழுது அவர் நடித்து வெளிவந்த “கட்டா குஸ்தி” படத்தில் அவருடைய நடிப்பு பலதரப்பட்ட மக்களாலும்ரசித்து சிலாகிக்கப்படுகிறது. ஜனரஞ்சகமான படமான அதில் ஒரு குஸ்தி வீராங்கனையாக நடித்திருப்பார். 

இந்நிலையில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நம்ம பூங்குழலி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. 
அந்த சந்திப்பின்போது தான் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதோ அந்த படம் உங்களுக்காக.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.