Android, LG, lg g flex, mobile specification, specifications, ஆண்ட்ராய்ட், ஆன்ட்ராய்ட் மொபைல், எல்.ஜி.

சர்வதேச தரமிக்க ஸ்மார்ட்போன் – LG G Flex

குழிந்த வடிவிலான (Curved Smartphone) ஸ்மார்ட்போன் ஒன்றினை LG நிறுவனம் வெளியிட்டுள்ளது. LG G Flex curved smartphone என்ற இந்த போனானது தற்பொழுது சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் இந்தியாவிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்வோம். 

LG G Flex – ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்: 

ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போனில், 
6 அங்குல வளைந்த நெகிழ்வுத் தன்மையுடைய OLD Display (திரை) அமைந்துள்ளது. இந்த திரையில் அல்ட்ரா ஒளி மற்றும் மெல்லிய நெகிழ்வுத் தன்மையைப் பெற்றுள்ளது. 

Lg-g-flex-curved-smartphone-specifications-price-availability


வீடியோ மற்றும் படங்கள், மற்றும் வீடியோ அழைப்புகளுக்குப் பயன்படும் இரு கேமராக்கள் அமைந்துள்ளன.

படங்கள் எடுப்பதற்குப் பயன்படும் கேமரா 13 மெகா பிக்சல் அடர்த்தி திறன் கொண்டது. வீடியோ அழைப்புகளுக்குப் பயன்படும் கேமரா 2.`1 மெகா பிக்சல் அடர்த்தி திறனை கொண்டுள்ளது. 
மற்றும் Adreno 330 GPU, 2 GB கொள்ளவுகொண்ட ரேம் ஆகியன அமைந்துள்ளன.
அருமையான, தரமுள்ள இந்த ஸ்மார்ட் போன் இயக்கப்படுவதற்கு 2.26 GHz திறனுடைய குவார்ட்கோர் பிராசசர் இதில் இணைந்தமைக்கபட்டுள்ளது.
சிறப்பு மிக்க இப்போனிற்குத் தேவையான மின்சக்தியை வழங்க 3500 mAh திறன் கொண்ட மின்கலம் அமைந்துள்ளது. 
இம்மாத இறுதியில் இப்போன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இச்சிறப்புமிக்க போனின் விலை அமெரிக்க டாலரில் $1355.53. 

LG GFlex smartphone specifications : 

  • 6-inch HD Real RGB curved plastic OLED Display
  • 2.26 GHz Qualcomm Snapdragon 800 QuadCore Processor
  • 2GB LP DDR3 RAM 
  • 6 Inch HD Curved P-OLED Display
  • 13MP Camera With LED Flash
  • 2.1 MP Front Facing Camera
  • 32GB On-Board Storage
  • 3500 MAh Battery

படங்கள்: 

Lg-g-flex-curved-android-smartphone
Tags: new lg smartphone, curved smartphone, android smartphone, lg g flex, lg g flex curved smartphone, lg first curved android smartphone, lg flex in India, lg flex curved, lg flex specs, mobile specs, android mobile specification. 

One Comment

Comments are closed.