Android, ஆண்ட்ராய்ட்

சாம்சங் கேலக்சி எஸ்3 மொபைலின் பேட்டரி லைஃப்பை அதிகரிப்பது எப்படி ?

How to increasing Samsung gallery s3 smartphone?

சாங்சங் கேலக்சி s3 ஸ்மார்ட் போனில் blue tooth, WiFi, Notification Light, AMOLED Screen ஆகியவையே பெரும்பாலான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

Blue Tooth வசதியை உங்களுடைய சாம்சங் கேலக்சி எஸ் 3போனில் பயன்படுத்தாதபோது அதை இயங்கா நிலையில் வைத்திருப்பது அவசியம். இதனால் மின்சக்தி விரயமாவது குறையும்.
increasing battery life samsung galaxy s3

அதைப்போலவே WiFi இணைப்பை பயன்படுத்தபோது, அதை ஆப் செய்து வைக்கவும். 
பெரும்பாலான நண்பர்கள் வைபை இணைப்பை பயன்படுத்திய பிறகும், அதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர். இது பேட்டரியின் மின்சக்தியை அதிகம் எடுத்துக்கொள்கிறது. எனவே அவ்வப்பொழுது வைபை இயக்க நிலையில் உள்ளதா என்பதை சோதித்து, அதை நிறுத்துவது அவசியம்.
முக்கியமான விடயம் சேம்சங் கேலக்சி எஸ் 3 மாடலில் அகல திரையான AMOLED இருப்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் மின்சக்தி தேவைப்படும். அதனால் திரையில் வெளிச்ச அளவினை குறைத்து வைப்பதன் மூலம் மிதமான மின்சக்தியை சேமித்து வைக்க முடியும். திரையின் வெளிச்ச அளவு குறைவதால் தேவைப்படும் மின்சக்தியும் குறையும்.
சேம்சங் கேலக்சி எஸ் டூ மொபைலில் notification light அணைத்து வைப்பதன் மூலம் பேட்டரியிலிருந்து கணிசமான மின்சக்தியை  வீணாவதை தடுக்க முடியும். இந்த நான்கு செயல்முறைகளையும் அடிக்கடி சோதித்து தேவையில்லாதபொழுது இவற்றை அனைத்து, நிறுத்தி வைக்கும்பொழுது கணிசமான மின்சக்தி பேட்டரியிலிருந்து வீணாவதை தடுக்க முடிவதோடு, அதிக நேரம் பேட்டரி மின்சக்தியை பயன்படுத்த முடியும்.

நன்றி.

– சுப்புடு