gmail tips

ஜிமெயிலில் அட்டாச்மெண்ட் லோகோவை மாற்ற

வணக்கம் நண்பர்களே..! மற்றுமொரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சந்திக்கிறோம். இன்றைய பதிவில் ஜிமெயிலில் வரும் அட்டாச்மெண்ட் லோகோவிற்கு பதிலாக மெயிலில் இணைக்கப்பட்டிருக்கும் கோப்புகளின் லோகோவை அட்டாச்மெண்ட் லோகாவாக மாற்றுவது எப்படி என பார்க்கலாம். மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருக்கும் கோப்பு எந்த வகையான கோப்புகள் என மெயிலைத் திறக்காமலேயே காண முடியும். வழக்கமாக அட்டாச்மென்ட் கோப்புகளைக் காட்ட ஊக்கு (Pin) போன்ற படமே இருக்கும். இனி அந்த படத்திற்குப் பதில் மின்னஞ்சலோடு இணைக்கப்பட்ட கோப்புகளின் logo படங்களையே அட்டாச்மெண்ட் லோகோவாக காட்டுமாறு செய்யலாம். அதற்கு இந்த ஆட்ஆன் தொகுப்பு நமக்கு உதவுகிறது.

இரண்டு படங்களையும் பார்த்தாலே எளிதில் விளங்கும்.

இவ்வசதியைப் பெற https://chrome.google.com/webstore/detail/johdeoloijidhejmalfkpchbihbiamph இந்த இணைப்பில் சென்று Add to Chrome என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும். அதில் ADD என்பதை கிளிக் செய்யவும்.

இனி உங்கள் கூகுள் குரோம் பிரௌசரில் இந்த பிளகின்(Plugin) இணைந்துவிடும். இப்போது நீங்கள் உங்கள் G-mail திறந்து பார்க்கும்போது அட்டாச்மெண்ட் லோகோவிற்குப் மெயிலுடன் இணைக்கபட்டு வந்திருக்கும் கோப்புகளின் லோகோ தெரியும்.

 குறிப்பு: இது முற்றிலும் கூகுள் குரோம் பிரௌசருக்கான நீட்சி என்பதால் கூகுள் குரோமில் மட்டுமே செயல்படும். நன்றி நண்பர்களே..!!