blogger templates, blogger tips

டிராபிக் அதிகரித்திட புதிய பிளாக்கர் டெம்ப்ளேட்டுகள் !

Update: புதிய ப்ளாகர் டெம்ப்ளேட்டுகளை BLOGGER இணையதளமே இலவசமாக கொடுத்துள்ளது. 2018ம் ஆண்டின் இறுதியில் மிகச்சிறப்பானதொரு “வார்ப்புரு” வசதிகளை கொடுத்துள்ளது. இதனால் அங்கும் இங்கும் தேடாமல், இங்குள்ள ப்ளாக்கர் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி வலைப்பூவை அழகூட்டலாம். 
புதிய வார்ப்புருக்களைப் உங்கள் ப்ளாக்கர் தளத்தில் செயல்படுத்திட, 
1. BLOGGER.COM ல் Gmail பயன்படுத்தி லாகின் செய்துகொள்ளவும். 
2. அதன் பிறகு உங்களது வலைப்பக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.
3. இடது பக்கத்தில் உள்ள Theme என்பதை கிளிக் செய்யவும்.
இப்பொழுது வலது பக்கத்தில் தோன்றும் ப்ளாகர் டெம்ப்ளேட்டுகளில் ஏதேனும் ஒன்றியை தேர்ந்தெடுத்து, கீழே இருக்கும் apply to blog என்ற ஆரஞ்சு வண்ண பட்டனை அழுத்தவும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த டெம்ப்ளேட் உங்களுடைய வலைப்பூவிற்கு வந்திருக்கும். 

blogger template


Gordon blogger template for free!

வணக்கம் நண்பர்களே..!

நீங்கள் பிளாக்கர் தளத்தின் மூலம் வலைப்பூவை உருவாக்கி பயன்படுத்திக்கொண்டிருப்பவரா?

அப்படியானால் இப்பதிவு உங்களுக்காகத்தான்…

பிளாக்கர் தளங்களின் வடிவமைப்பை நிர்மாணிப்பது Template எனப்படும் வார்ப்புருதான்.

இந்த வார்ப்புருவை பிளாக்கர் தளங்களே வடிவமைத்து (Blogger Default Templates) இலவசமாக கொடுத்துள்ளது. ஆனால் இவற்றில் பலவும் விரும்பத்தகாத ஒன்றாக இருப்பதால், மூன்றாம் நபர்கள் வடிவமைத்த(Third Party Templates) பிளாக்கர் டெம்ப்ளேட்களையே பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த வகையில் நாம் இன்று அறிமுகப்படுத்துவது இந்த வார்ப்புருவை..!

இன்றுதான் புதியதாக இந்த தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியிட்டவுடனேயே சூட்டோடு சூடாக இந்த இடுகையையும் எழுதி நமது “சாப்ட்வேர் சாப்ஸ்” வலைத்தளத்தின் வாசகர்களுக்கு பகிர்வதில் பேரின்பம் கொள்கிறேன்.

வார்ப்புருவின் பெயர்: Gordon Blogger Template

வெள்ளைநிறப் பின்னணியும் (White background) , மத்தியஸ்த கருப்புநிற பக்கப்பட்டையும் ( (middle black background sidebar) ) கொண்ட இந்த வார்ப்புரு, அதிக வாசகர்களையும், பதிவர்களையும் கவர்ந்திழுக்கும் (Attract viewers) என்பதில் சந்தேகமில்லை..

வார்ப்புரு அமைவதே ஒரு வலைப்பூவிற்கு பல பக்கப்பார்வைகளைப் (Many more page views) பெற்றுத்தரும்.

வார்ப்புருவின் தாரக மந்திரமே.. அது வாசகர்களை எக்காரணம் கொண்டும் சலிப்படையாமல் வைத்திருப்பதுதான். அவர்கள் கண்களுக்கு எந்த ஒரு உறுத்தல்களையும் கொடுக்காமல், முழுமையாக இடுகைகளை வாசிக்க ஏதுவாக இருக்குமாறு அமைந்திருப்பதுதான் ஒரு நல்ல வார்ப்புருவிற்கான அடையாளம் (Identification of Good Templates). ஏன் வார்ப்புருவின் இலக்கணமாகவே கூட சொல்லலாம்.

அந்த அடிப்படையில் பார்ப்போமானால் இன்று புதிதாக வெளிவந்திருக்கும் இந்த the new gordon blogger template முற்றிலும் பொருந்திருயிருக்கிறது. சரி. இந்த வார்ப்புருவை எப்படி பயன்படுத்துவது?

வழக்கம்போலவே நீங்கள் வார்ப்புருவை தரவிறக்கம் (Download Template) செய்துகொள்ளுங்கள். தரவிறக்கச்சுட்டி(Download Link and Demo):


1. இந்த வார்ப்புருவின் முன்னோட்டத்தைப் பார்க்க DEMO கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
2. இந்த வார்ப்புருவை தரவிறக்கம் செய்ய DOWNLOAD என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

  • உங்கள் வார்ப்புருவை மாற்றுவதற்கு முன்பு உங்கள் பிளாக்கர் தளத்தில் உள்ள வார்ப்புருவை பேக்கப் (Download Full Template) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 
  • இப்போது Browse கிளிக் செய்து வார்ப்புருவைத் தரவேற்றிக்கொள்ளுங்கள். 
  • இறுதியாக Save templates என்பதை கிளிக் செய்து புதிய வார்ப்புருவை சேமித்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் வலைப்பதிவிற்கு புதியவரா? உங்களுக்கு டெம்ப்ளேட் மாற்றத் தெரியவில்லையா? அப்படியானால் வலைப்பூவில் வார்ப்புரு மாற்றுவது எப்படி என்ற இந்த பதிவை ஒருமுறை வாசித்துவிடுங்கள்.  பதிவை படித்து முடித்தவுடன் நீங்களாகவே வார்ப்புருவை மாற்றிக்கொள்ள முடியும்.

நன்றி நண்பர்களே..!

என்றென்றும் அன்புடன்
உங்கள்
சுப்புடு

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல பிரபல வலைத்திரட்டிகளில், சமூக தளங்களில் பகிர்ந்திடுங்கள்.

4 Comments

Comments are closed.