google new search site, Useful sites, புதிய இணையதளம்

தேடினால் எல்லாம் கிடைக்கும். தேடல்களுக்கு கூகிளின் புதிய தேடல் தளம்..!!


தேடல்களுக்கென்று தனிச்சிறப்பு இடத்தினைப் பெற்றிருப்பது கூகிள்  இணையதளம்.   இந்நிறுவனம் புதியதொரு  தேடல் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.  முகவரி www.wdyl.com.

what do you love? என்பதின் சுருக்கம்தான் wdyl.com.
இத்தளத்தின் சிறப்பம்சங்கள்:

இந்த தளத்திற்கு சென்று நாம் எந்த ஒரு வார்த்தையைக் கொடுத்துத் தேடினாலும் உடனடி முடிவுகளை நமக்கு அள்ளி வீசுகிறது. இதென்ன புதுசு என்கறீர்களா?  ஆம். புதுசுதான் நண்பர்களே..! கூகுள் வழங்கும் சேவைகளாக கூகிள்மேப்ஸ், கூகுள் காலண்டர்(google calander), கூகுள் லேப்ஸ்(google labs), யூடியூப்(you tube), பிளாக்(blog) போன்றவைகளிலிருந்து முடிவுகளை ஒரே நேரத்தில் தேடி தருகிறது. இதற்கு நாம் கூகிளில் சர்ச் செய்தால் ஏதாவது ஒன்றை மட்டுமே அதாவது, web search மட்டுமே காட்டும். வேண்டுமானால் அதை நாம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தளத்தில் தனது அனைத்து சேவை தளங்கிலிருந்தும் முடிவுகளை காட்டி நம்மை அசத்துகிறது.

இந்த முகவரியை கிளிக் www.wdyl.com செய்து நீங்களும் உங்களுக்குத் தேவையான முடிவுகளைப் பெற்று பயன்பெறுங்கள்.. நன்றி நண்பர்கள் மேலும் ஒரு புதிய பதிவுடன் சந்திப்போம். இப்பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இட மறக்காதீர்கள்..!!

அப்டேட்: தற்பொழுது இந்த இணையதளம் செயல்படவில்லை. 

One Comment

Comments are closed.