Free software, photo editor

போட்டோவின் பிக்சல் அளவை 400 மடங்கு அதிகரிக்க மென்பொருள் !

புகைப்படங்களின் பிக்சல் அளவை அதிகரிக்கப் பயன்படுகிறது ஓர் அருமையான மென்பொருள். பிக்சல் என்றால் என்ன? அதை ஏன் அதிகரிக்க வேண்டும்? அவ்வாறு அதிகரிப்பதால் என்ன நடக்கும்? அதனால் என்ன பயன் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

பிக்சல் என்பது ஒரு போட்டோவில் இருக்கும் ஒரு புள்ளியை குறிக்கும். பல லட்சக்கணக்கான புள்ளிகள் இணைந்ததே ஒரு போட்டோ. அந்த புள்ளிக்கு பெயர்தான் Pixel.

புகைப்படங்கள் எடுக்க உதவும் தொழில் சார்ந்த கேமிராக்கள், ஆன்ட்ராய்ட்போனில் உள்ள கேமிராக்கல் போன்றவற்றில் 5MP Camera, 8MP Camera என இருக்கும். MP என்பது Megapixel.

ஒரு மெகா பிக்சல் என்பது 1000000 பிக்சல்கள்.

புகைப்படத்திற்கும் அப்படியே. கேமிரா சென்சாரில் சேமிக்க கூடிய அளவினைதான் பிக்சல்கள் என்கிறோம். 8 மெகா பிக்சல் கேமிராவில் எடுக்கப்படும் புகைபடமானது 8000000 லட்சம் பிக்சல்கள் (புள்ளிகள்) கொண்டதாக இருக்கும்.

இதனால்தான் புகைப்படங்களை Pixel அலகு கொண்டு குறிப்பிடுகின்றனர்.

சரி. புகைப்படம் எடுத்தாயிற்று. அதை எதற்கு பிக்சல் அளவினை அதிகரிக்க வேண்டும். குறைந்த பிக்சல் அளவுடைய கேமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிக ரெசுல்யூசன் கொண்ட திரைகளில் பார்த்தால் புகைபடம் மங்களாக, தெளிவற்றதாக இருக்கும்.

மேலும், அதை பிரிண்ட்செய்யும்போது தேவையான கிளாரிட்டியுடன் பிரிண்ட் அவுட் கிடைக்காது. அதனால் புகைப்படத்தின் பிக்சல் அளவினை பெரிதாக்குகிறோம்.

அப்படி புகைப்பட்டத்தின் Resolution அதிகரிக்கும்பொழுது அதன் குவாலிட்டியும் அதிகரிக்கும். போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர்கள், ப்ளக்ஸ் பேனர் தயாரிப்பவர்கள், பத்திரிகை அச்சிடும் தொழிலில் இருப்பவர்கள் பிக்சல் பற்றிய நுணுக்கமான வேலைகளை தெரிந்து வைத்திருப்பார்கள்.

upsize images software

போட்டோக்களின் பிக்சல் அளவை அதிகரித்தால், அது தெளிவாக தரமானதாக மாறிவிடும். புகைப்படத்தில் பிக்சல் அளவை மாற்றுவதற்கு போட்டோஷாப் மென்பொருள் பயன்படுகிறது. போட்டோஷாப் பயன்படுத்த கண்டிப்பாக அதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

போட்டோஷாப் மென்பொருள் இல்லாமல், மிக சாதாரணமாக ஒரு புகைப்படத்தின் பிக்சல் அளவை 400% விகிதம் உயர்த்த பயன்படுகிறது Reshade என்ற அப்ளிகேஷன். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

ரீஷேட் மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: Download reshad app for windows pc

ரீ ஷேட் மென்பொருள் பயன்படுத்துவது எப்படி?

1. மெற்கண்ட சுட்டியை அழுத்தி மென்பொருளை டவுன்லோட் – இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
2. மென்பொருளை திறந்து File => Open கொடுத்து, பிக்சல் அளவை அதிகரிக்க வேண்டிய படத்தை திறந்துகொள்ளவும்.
3. குறிப்பிட்ட படத்தை எத்தனை பிக்சல் அளவில் பெற வேண்டுமோ அதை தெரிவு செய்யவும்.
4. கூடுதலாக அதில் உள்ள control, accuracy, texture போன்ற வசதிகளை பயன்படுத்தி படத்தினை மேலும் தரமானதாக மாற்றிக்கொள்ளலாம்.
5. இதில் உள்ள Batch Processing வசதியின் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களை திறந்து, அனைத்திற்கும் ஒரே நேரத்தில் பிக்சல் அளவினை அதிகரித்துக்கொள்ள முடியும்.

One Comment

Comments are closed.