android app, android phone security app, eset mobile security app, mobile security software

மிக சிறந்த மொபைல் பாதுகாப்பு செயலி

மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்தாதவர்களே இல்லை. எனவே கம்ப்யூட்டருக்கு தேவைப்படுவது போல ஸ்மார்ட்போனிற்கு கட்டாயம் ஒரு செக்யூரிட்டி ஆப் தேவைப்படுகிறது.

இணையத்தில் பலதரப்பட்ட செக்யூரிட்டி ஆப்கள் கிடைக்கின்றன. அவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என மொபைல் பயனர்கள் சில நேரங்களில் குழம்பி போவதுண்டு. சில பல நல்ல மொபைல் ஆப்கள் இருப்பினும், அவற்றில் சிறந்ததாக கருதப்படுவது Eset மொபைல் செக்யூரிட்டி ஆப்.

மொபைல் செக்யூரிட்டி ஆப் அவசியம் தேவையா?

ஆம். ஒவ்வொரு மொபைலும் சாதாரணமாக கிடைப்பதில்லை. அதன் மதிப்பு குறைந்த பட்சம் ரூபாய் 5000 இருக்கும். அதைவிட, நாம் மொபைலில் கொடுக்கும் டேட்டாக்களின் மதிப்பு (தரவு) மிக மிக அதிகம். பயனர் பெயர், கடவுச் சொல், வங்கி குறித்த விபரங்கள், தனிப்பட்ட செய்தி, புகைப்படங்கள், வீடியோ என அனைத்துமே விலை மதிப்பில்லாத பொங்கிஷங்கள் தான். இணைய வெளியில் கொட்டிக் கிடக்கும் கோடிக்கணக்கான தகவல்களில் நம்முடைய தகவல்களும் பாதுகாப்பப் பட வேண்டியவை.

நிச்சயமாக அது தவறானவர்களின் கைகளுக்குச் செல்ல  நாமே துணையிருக்க கூடாது. எனவேதான் மொபைல் போனிற்கு செக்யூரிட்டி ஆப் கண்டிப்பாக தேவை.

Eset Mobile Security App

ஸ்மார்ட் போனிற்கு 100% பாதுகாப்பை உறுதி செய்கிறது இசெட் மொபைல் செக்யூரிட்டி ஆப். இது கொடுக்கும் பாதுகாப்பு வசதிகள்:  Antivirus, Anti-Theft, SMS & Call Filter, Anti-Phising, Security Audit என

eset mobile security app

இது  சிறந்த இணைய பாதுகாப்பினை வழங்குகிறது. குறிப்பாக Webpage and AntiTheft பாதுகாப்பினை 100% வழங்குகிறது. இதனால் இணையத்தில் உலவும்பொழுது கொடுப்படும் தகவல்கள் திருடுபோவது பாதுகாக்கப்படுகின்றன.

இலவச மொபைல் செக்யூரிட்டி ஆப்

Eset Mobile Security App இலவசமாக கிடைக்கிறது. கட்டணம் செலுத்தி பெறும் ஆப்பில் மேலதிக வசதிகள் கிடைக்கும்.

டவுன்லோட் செய்ய சுட்டி:
Download Eset Mobile Security App

கூகிள் ப்ளேயில் டவுன்லோட் செய்ய சுட்டி: 
Download Eset Mobile Security App in Google Play

Tags: Download Eset Mobile Security App, Download Eset Mobile Security App for android, Android Phone Mobile Security App.