menporul, software, சாப்ட்வேர், மென்பொருள்

மென்பொருள் என்றால் என்ன? அது பற்றிய விளக்கம்.

what is software in tamil

மென்பொருள் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? அந்த பொருளை பார்க்க இயலுமா? அதன் பயன் என்ன? அது எப்படி செயல்படுகிறது? எங்கு, எதற்காக அது உருவாக்கப்பட்டது என்பது போன்ற கேள்விகள் உங்களிடத்தில் இருக்குமானால் கண்டிப்பாக அதற்கான விடைகளாக இந்த பதிவு அமையும்.

 கணினி கற்றுக்கொள்ளும் புதியவர்களுக்கு இதுபோன்ற கேள்வி எழுவது இயற்கைதான். Software என அழைக்கப்படும் இந்த Menporul பற்றி பல பாமர மக்களுக்கு புரியாமல் இருக்கிறது.

மெல்லியபொருள் மென்பொருள். கண்ணுக்கு புலனாகாத வகையில், கணினியால் மட்டுமே புரிந்துக்கொள்ள கூடிய மொழியில் எழுதப்பட்ட நிரல்களின் தொகுப்பு என்று வரையறுக்கலாம்.

மென்பொருள்கள்

மிக சுலபமாக புரிந்துகொள்ளும்படி கூறுவதென்றால் மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த வேலைகளனைத்தையும் கம்ப்யூட்டர் உதவியுடன் செய்து முடித்துக் கொடுப்பவைகள்தான் மென்பொருள்.

ஆங்கிலத்தில் சொல்வதெனில் “Set of Instructions called programs responsible for running computer is called Software.Software makes Hardware to run.”

கணக்குகள் செய்ய, தகவல்களை திரட்டி வைத்துக்கொள்ள,  திரட்டிய தகவல்களை தேவைப்படும்போது எடுத்துக் கையாள, இயந்திரங்களை பணி செய்ய வைக்க.. இப்படி மனிதனாக செய்த வேலைகளனைத்தையும், முழுமையாகவோ, அல்லது பகுதியாகவே செய்வதற்கு கணினிகள் பயன்படுகின்றன. இந்தக் கணினிகளை செயல்படுத்த பயன்படும் நிரல்வரிகளால் உருவாக்கப்பட்ட உயிர்பொருளே மென்பொருளாகும்.

மென்பொருள்களின் மதிப்பு

ஒரு சிறிய பல சரக்கு கடை. அதில் உள்ள மொத்த சரக்கு எவ்வளவு.. எவ்வளவு விற்றிருக்கிறது.. என்னென்ன சரக்குகள் அதிகளவில் விற்றுத் தீர்க்கிறது.. எந்தெந்த சரக்குகள் அதிகம் விற்பனையில்லாமல் தேங்கி நிற்கிறது. எவையெல்லாம் எதிர்காலத்தில் அதிகமாக தேவைப்படும் சரக்குகள்? என்பனவற்றையும்,

மாத வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எத்தனை? யார் யாரெல்லாம் பணம் கொடுத்து பொருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.. யார் யாரெல்லாம் மாத தவணையில் பெற்றுச் செல்கிறார்கள்? மாத தவணை செலுத்தியவர்கள் எத்தனைப் பேர்? செலுத்தாதவர்கள் எத்தனைப் பேர்?

கடையில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர். அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை செய்பவர்கள் எத்தனை நாள் விடுப்பு எடுத்திருக்கிறார்கள்.. கடையை விட்டு சரக்கு எடுக்கச் செல்பவர்கள் எத்தனை பேர்? எங்கிருந்து எடுத்து வருகிறார்? போக்கு வரத்து செலவுகள் எவ்வளவு..?

இப்படி தேவையான அனைத்து விபரங்களையும் பொதிந்து அவற்றைப் பயன்படுத்த உருவாக்கப்பட்டவையே கணினி. இந்தக் கணினியை இயங்கச் செய்வதும், குறிப்பிட்ட செயல்களை மனிதனாக அன்றி கணினியுடன் தொடர்புகொண்டு தானாகவே இதை செய்துகொள்ளும் திறமையைக் கொடுப்பதுதான் இந்த மென்பொருள்கள்.

இத்தனை வேலைகளையும் மனிதனால் செய்வதென்பது சாதாரண விடயம் இல்லை. ஒவ்வொரு பணிக்கு ஒவ்வொருவர் என அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க, நிர்வகிக்க ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நிச்சயம் தேவைப்படும்.

சிறிய மளிகை கடை போன்றவற்றிற்கே இத்தனை தேவைகள் இருக்கும்போது, பெரிய பெரிய நிறுவனங்களுக்கு?

இவற்றைத்தான் இப்போது எளிமையாக கணினிகள் செய்து வருகின்றன. மனித மூளையில் தோன்றும் எண்ணங்களை, மனிதனால் சிந்தித்து செய்யக்கூடிய வேலைகளனைத்தையும் கணினியைக் கொண்டு வேகமாக, விரைவாக செய்துகொள்ள முடிகிறது.

மனித மூளையைவிட அதிவிரைவாக கணினி செயல்பட்டு, தேவையான வேலைகளை உடனடியாக முடித்துக்கொடுத்துவிடுகிறது. இவற்றிற்கு உதவுபவைதான் மென்பொருகள். இந்த மென்பொருள் காலம் முழுக்க பயன்படும். அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கேற்ப மாற்றம் செய்து இவைகள் வெளியிடப்படுகின்றன. ஒரு முறை உருவாக்கிய மென்பொருள் உலகத்திலுள்ள அனைவருக்கும் காலம் முழுக்கப் பயன்படும் என்றால் இதன் மதிப்பை சொல்லவும் வேண்டுமோ?

கணினிகளில் அதிகமாக பயன்படுத்தும் மென்பொருள்கள்

(The most important jobs in computers:)
ரயில்வே துறையில் டிக்கெட் முன் பதிவு(Railway Ticket Booking), வங்களில் பணப்பட்டுவாடா(Money exchanged in banks) முதல் பணம் சேமிக்கும் முறைகள்(Savings) வரை அனைத்தும் கணினி மயம்தான். இவற்றிற்காக ஒவ்வொரு துறைக்கு தகுந்தவாறு மென்பொருள்களின் (Appropriate software for each department) தேவை அதிகமாக இருக்கிறது. கால மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களைக்கொண்டு மென்பொருள் வடிவமைப்பிலும் மாறுதல் ஏற்படுவது இப்போது சாதாரணமாகிவிட்டது.

புதிய புதிய கண்டுபிடிப்புகள் (New inventions), அவற்றிற்கேற்ப புதிய மென்பொருகள் கண்டுபிடிக்க (Software suitable for new inventions) வேண்டிய கட்டாய சூழ்நிலைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளுக்கு OCR மென்பொருள் கண்டுப்பிடிப்பதுபோல.. எத்தனையோ துறைகளில் மென்பொருள்களின் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

மென்பொருள் உருவாக்குவதில் இந்தியர்களின் பங்கு

(Software, and Indians:)
மேலைநாடுகளில் மென்பொருள்களின் தேவைகள் அதிகம் இருக்கின்றன(software needed). அவற்றை உருவாக்குவதில் நம்மவர்களின் பங்குதான் அதிகம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் மென்பொருளால் ஏற்படும் பயன், எந்த கண்டுப்பிடிப்பிற்கு மென்பொருளை உருவாக்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு பிடிக்கும், எப்படி வடிவமைக்க வேண்டும் போன்ற திட்டங்களை மட்டும் அங்கிருக்கும் வல்லுநர்கள் அறிவித்துவிட்டு, மென்பொருளை உருவாக்கும் பணியை நம்மவர்களிடம் பணித்துவிடுகிறார்கள்.

இங்கிருந்து செல்லும் இந்திய இளைஞர்கள் இவற்றையே தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டு, இரவு, பகல் பாராமல் கொடுத்த பணியை கச்சிதமாக செய்து மென்பொருளை உருவாக்கிவிடுகிறார்கள். இதற்கு இவர்களுக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. மென்பொருளின் காப்புரிமை, உருவாக்கத் திட்டம் கொடுத்தவர்களுக்கே போய் சேர்கிறது.

மென்பொருள் பற்றிய எளிய விளக்கம்

ஒருவர் வசிக்க வீடு வேண்டும். அவர் குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர்? யார் யார் என்னென்ன செய்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை வயதில் உள்ளவர்கள்? எத்தனை அறைகள் உள்ள வீடாக கட்ட வேண்டும். யார் யார் எந்தெந்த அறைகளில் தங்க வேண்டும். தங்கும் அறைகளில் அவரகளுக்கேற்ற வசதிகளை செய்து தருவது இப்படி ஆராய்ந்து முடிவெடுப்பது முதல்படி.

வீடுகட்ட எண்ணத்தை உருவாக்கியாகிவிட்டது. இந்த எண்ணத்தை செயல்படுத்த வேண்டுமே? இதற்கு முதலில் ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். வீடு கட்டுவதற்குரிய வரைபடத்தை வரைய வேண்டும். வரைபடத்திற்கு தகுந்த மாதிரியான வீட்டுச் செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதையும் சேர்த்துக்கொண்டு , வீடு கட்டி முடிக்க எவ்வளவு செலவாகும் என்ற திட்டத்தை வகுப்பது இரண்டாவது படிமுறை.

திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு செய்வதுதான் வீடு கட்ட ஆரம்பிப்பது. எப்படி நடைமுறைபடுத்துவது. செயல்படுத்துவது என்பது போலதான். இதைத்தான் நம் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு மென்பொருள் சேவையை ஏற்றுமதி செய்யும் வேலையில் நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கின்றன.

ஜாவா(Java), டாட்நெட்(.net) என படித்துவிட்டு வேலைக்குச் சேர்பவர்களின் பணி இதுதான்.. கொத்தனார் வேலை.. செங்கல் கட்டுவது, சிமெண்ட் கலவை குழப்பி பூசுவது போன்ற கட்டுமானப் பணிகள்..இவர்கள் இவற்றைத்தான் மென்பொருள் துறையில் செய்கிறார்கள்.. அதாவது அதாவது கொத்தனார் வீடு கட்டுகிறார் இவர்கள் மென்பொருளை கட்டுமானம் செய்கிறார்கள்.

அடுத்த படிமுறையில்(step) உருவாக்கிய புதிய மென்பொருளைப் பராமரித்தல்(Developed a new software maintenance), பயன்படுத்தும்போது ஏதாவது பிரச்னைகள் இருந்தால் சரிசெய்வது(problems solving).. அதாவது உருவாக்கிய வீட்டில் விரிசல், உடைசல் இருந்தால் அவற்றை நீக்குவது போன்ற செயல்தான்.

மேலும் வாடிக்கையாளர்கள் புதிய வசதிகளை அந்த மென்பொருளில் கேட்கும்போது செய்து தருவது.. அதாவது எனக்கு மேற்கு பக்கம் ஒரு ஜன்னல் வேண்டும் என வீட்டுக்கார்ர் கேட்டால் அந்த பக்கம் சுவற்றை உடைத்து ஜன்னல் வைத்து பூசிக்கொடுப்பதுபோலதான். மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பது.

இவ்வாறு அவ்வப்போது புதிதாக வாடிக்கையாளர்கள் தேவைகளைக் கூறும்போது மென்பொருளை மேம்படுத்தி செய்து தருவது இதுதான் நம்மவர்கள்(இந்தியர்கள்) செய்து தரும் வேலை. இத்தகைய மென்பொருள்கள் சிறிய, சிறிய தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை, அதிக முக்கிய தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை என பல்வேறு வகைகளில் இருக்கிறது.

இந்த பதிவில் மென்பொருள் பற்றிய புரிதல் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன். அடுத்தடுத்த பதிவுகளில் கணினி, செல்போன் போன்றவற்றிற்குத் தேவையான முக்கியமான சாப்ட்வேர்/ஆப்ஸ் பற்றி அறிந்துகொள்வோம். இப்பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை எழுதுங்கள். மேலும் மென்பொருள் பற்றிய விளக்கங்கள் உங்களுக்கு மிக அதிகமாக தெரிந்திருப்பின் அதுப்பற்றி இங்கு கருத்துப்பெட்டியில் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

Tags: menporul, மென்பொருள், சாப்ட்வேர், Software