printer, robotic printer, tech news

ரொபோட்டிக் மினி பிரிண்டர் | Robotic Mini Printer

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. கையடக்க தொலைபேசி, மினி கம்ப்யூட்டர், டேப்ளட் போன்ற வரிசையில் தற்பொழுது Robotic Mini Printer (மினி மொபைல் பிரிண்டர்) சாதனமும் இணைந்துள்ளது.

ஒரு ஸ்மார்ட் போன் மற்றும்  Mini Mobile Robotic Printer-ம் இருந்தால் போதும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் ஆவணங்களை பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும்.

The Mini Mobile Robotic Printer

The Mini Mobile Robotic Printer

இப்புதிய சாதனத்தை எங்கு சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடியும்.
வெளியிடங்களுக்கு செல்லும் இடங்களில், எந்த இடத்தில் இருந்தாலும் உடனே பிரிண்ட் எடுத்துக்கொள்ள முடியும்.

இப்புதிய மொபைல் மினி பிரிண்டரை ப்ளூடூத்- Bluetooth மூலம் இயக்க முடியும்.
ஸ்மார்ட் போனில் உள்ள பிரிண்ட் செய்யவேண்டிய டாக்குமெண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு, பேப்பரின் நீள, அகலம் போன்ற Paper Settings நிர்ணயித்துவிட்டால் போதும்.

அதன் பிறகு, பிரிண்ட் செய்ய வேண்டிய பேப்பரின் மீது இந்த ரோபோட்டிக் பிரிண்டரை எடுத்து வைத்தால் போதும்.

பிரிண்டரில் உள்ள ஆம்னி வீல் நுட்பம் செயல்பட்டு, துல்லியமாக பிரிண்ட் செய்ய வேண்டியவற்றை, தானாகவே நகர்ந்து பிரிண்ட் செய்கிறது.

மொபைல் மினி பிரிண்டரில் ஒரு முறை இங்க்ஜெட்டை – Inkjet நிரப்பிவிட்டால் போதும். ஆயிரம் பக்கங்களுக்கு மேல் பிரிண்ட் செய்ய முடியும்.

சோதனை நிலையில் உள்ள இந்த மொபைல் மினி ரோபோட்டிக் பிரிண்டர் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Specifications of The Robotic Mini Pinter: 

Physical dimensions and weight: 10 centimeters high and 11.5 centimeters in diameter and will weigh about 300g.
Materials: cover made from Polycarbonate
Media sizes: any standard size.
Print Speed: 1.2 ppm (estimated according to the prototype specs).
Print Quality: currently the prototype can reach up to 96×192 dpi, the final product will have higher resolution.
Ink Cartridge Configuration: one black cartridge.
Connectivity Technology: Wireless.
Interface: Bluetooth, Bluetooth BPP.
Connections: 1 x Micro Usb.
Battery Type: Lithium Polymer.
Run Time (Up to): 1 hour.
Charge Time: 3 hours.
Supported Os: Android, IOS, Linux, OSX, Windows.

இந்த Robotic Mini Portable Printer எப்படி செயல்படுகிறது என்பதை கீழுள்ள வீடியோவில் காணலாம்:

Tags: Printer, Robotic Printer, Mini Printer, Smartphone Printer.