Free software, இலவச மென்பொருள், தொழில்நுட்பம்

விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய

வணக்கம் நண்பர்களே.. ! தொடர்ந்து நேரமின்மை காரணமாக பதிவுகள் எதுவும் எழுதமுடியவில்லை என்பதை முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விண்டோஸ் எக்ஸ்பி(Windows xp) ஆபரேட்டிங் சிஸ்டம்தான் இன்று பெரும்பாலானோர் பயன்படுத்துகிறோம் இல்லையா? விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய புதிய version கள் வந்துவிட்டாலும் பழகிப் போன windows XP விட்டு விட நமக்கு மனசிருப்பதில்லை.. அதோடு மட்டுமில்லாமல் தொடர்ந்து பயன்படுத்திப் பழகிவிட்டதால் மற்ற புதிய இயங்குதளங்களுக்கு மாறுவதற்கும் தயக்கம் வருவது சகஜம்தான்.. இல்லையா?

சரி.. வேண்டாத இந்த கதைகளை எல்லாம் விட்டுவிடலாம்.. நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவரா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். விண்டோஸ் எக்ஸ்பியில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய பயன்படும் ஒரு அற்புதமான மென்பொருளைப் பற்றி இப்பதிவில் காண்போம். ஒரு வரி விடாமல் படித்துப் பயன்படுத்திப்பாருங்கள்.. இந்த மென்பொருளின் மகத்துவம் உங்களுக்குப் புரியும்.

உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் நடைபெற்றுவிட்டவுடன் என்ன நடக்கும் தெரியுமா?

கணினியில் டாஸ்க்மேனேஜர்(Task Manager), ரெஜிஸ்டரி எடிட்டர்(Registry Editor), ரன் டயலாக் பாக்ஸ் (Run Dialogue box)போன்றவற்றை வைரசானது செயலிழக்க வைத்துவிடும். அதாவது Disable செய்துவிடும். இதனால்தான் உங்கள் கணினி முடங்கிவிடும். அல்லது ஒரு சில பிரச்னைகளைக்கு வழி வகுத்துவிடும்.

இப்படி வைரஸ் தாக்கத்தால் உங்கள் கணினி பாதிக்கப்படும் போது மேற்சொன்ன Task manager, registry editor ஆகியவற்றை திறக்கும்போது அவற்றில் பிழைச் செய்தி (Error message)மட்டுமே காட்டும். இந்த எர்ரர் மெசேஜ் அநேகமாக இப்படி இருக்கும்.
“Task Manager has been disabled by your administrator”.. ஆனால் நாமாக இதை டிசேபிள் செய்திருக்க மாட்டோம்…

இதுபோன்று சின்ன சின்னப் பிரச்னைகள் கணினியில் தோன்றும்போது அவை வைரஸின் கைங்கர்யமாகத்தான் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.. இப்பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது இம்மென்பொருள். மென்பொருளின் பெயர்: XP Quick Fix

இந்த எளிய மென்பொருள் மூலம் உங்கள் விண்டோஸ் xp யில் ஏற்படும் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.

Enable Command Prompt
Enable Folder Options
Enable Recovery Console
Enable Registry Editor
Enable Task Manager
Error when trying to access Add or Remove/ Program and Features program
Fix CD autoplay
Fix CD/DVD drive is missing or not recognized
Fix delay in opening Explorer
Fix error 1606 couldn’t access network location
Fix right-click error
Fix slow hotkeys
Fix slow network file/shared/remote
Remove OEM splash and wallpaper
Restore “Send To” context menu item
Restore Device Manager
Restore grayed Explorer and Taskbar toolbars
Restore grayed file associations
Restore missing Run dialog box
Restore My Computer (Computer) properties
Restore My Documents properties
Restore My Network Places to Desktop
Restore Network icon to system tray
Restore the native ZIP file integration
Stop My Documents open at startup

ஆகிய பிரச்னைகளுக்கு இச்சிறிய மென்பொருள் தீர்வு காண்கிறது.. மென்பொருளைத் தரவிறக்கி.. உங்கள் கணினியில் மேற்க்கண்ட பிரச்னைகள் ஏதேனும் இருப்பின் அவற்றிக்குரிய பட்டனை அழுத்தி பிரச்னைக்கு நீங்கள் எளிதாக தீர்வு காண முடியும். இப்பயனுள்ள மென்பொருளைத் தரவிறக்க கீழ்க்கண்ட பட்டனைச் சொடுக்கவும்.

இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பின் பின்னூட்டம் இடுங்கள்.. நன்றி நண்பர்களே..!!!