adsense, free screen recording software, Free software, money making through google adsense, revenue, screen recording, screen video making software, youtube

ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் பணம் சம்பாதிக்க

ஸ்கிரீன் ரெக்கார்டிங்: 

நாம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடப்பவற்றை காணொளியாக பதிவு செய்வதுதான் ஸ்கிரீன் ரெக்கார்டிங். கம்ப்யூட்டரில் மட்டுமல்ல.. ஸ்மார்ட்போன்களில் நாம் செய்வதை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியும். 

அப்படி ஸ்கிரீனில் நடந்தவற்றை வீடியோவாக பதிவு செய்த தை யூடீயூப் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் இணையதளங்களில் அப்லோட் செய்வதன் வழியாக பணம் சம்பாதிக்கலாம்.

டுடோரியல்: 
ஒரு இணையதளத்தை எப்படி பயன்படுத்துவதை என்பதை காட்ட, அதில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து டுடோரியல் வீடியோவாக மாற்றலாம். 
உ.ம். இணையம் மூலம் மின்சாரம் கட்டணம் செலுத்துவது எப்படி? என்பதை அப்படியே ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்து பதிவேற்றலாம். 
இணைய செயல்பாடுகளை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து பதிவேற்றுவதன் மூலம், அவைகளைப் பற்றிய தெரியாத பலர் அதைக் கற்றுக்கொள்ள வழி உண்டாகும். அதிக பார்வையாளர்கள் பெறும் வீடியோ கணிசமான விளம்பர வருவாயை ஈட்டித் தரும். 

ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ
இதே போல நீங்களும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவங்களுக்கு கற்றுக்கொடுக்க, உங்களோட கம்ப்யூட்டர்ல நீங்கள் செய்கிற செயல்களை அப்படியே வீடியோவாக ரெக்கார்ட் செய்ய முடியும். 

வீடியோ ரெக்கார்டிங் சாப்ட்வேர் (Video Recording Software)

இதுமாதிரி நீங்க ரெக்கார்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா.. கீழ இருக்கிற போஸட்டை படிச்சுப் பாருங்க..
நிறைய ஸ்கிரீன் ரெக்கார்டிங் சாப்ட்வேர்கள் இருக்கு..உங்களுக்குப் பிடித்தமான, உங்களோட வசதிக்குத் தகுந்த மாதிரியான சாப்ட்வேர்கள் டவுன்லோட் செய்து நீங்களும் “Screen Recording” செய்யலாம்.

எப்படி ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்வது?

ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்ய சில மென்பொருட்கள் உண்டு. அவற்றில் சிறந்த மற்றும் எளிமையான மென்பொருள் Camtasia Studio. இந்த மென்பொருள் மூலம் திரையில் தோன்றுபவற்றை ரெக்கார்ட் செய்வதோடு, அந்த வீடியோ எடிட் செய்து அழகுற மாற்றிட முடியும். 
Camtasia டவுன்லோட் செய்ய சுட்டி: 
வீடியோ மூலம் பணம் சம்பாதிக்க

நீங்க பதிவு செய்கிற ஸ்கிரீன் வீடியோவை யூடியூப் மாதிரியான தளங்கள்ல பதிவேற்றிவிட்டு, அதை நிறையபேர் பார்த்தாங்கன்னா அதுக்கு யூடியூப் தளம் உங்களுக்கு காசும் கொடுக்குதுங்க…கூகிள் ஆட்சென்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்க…. அதை இந்த வீடியோ தளத்திலும் யூஸ் பண்ணலாம்.. உங்களோட வீடியோ ஓட ஓட…அதுல விளம்பரமும் காட்ட வைக்கலாம்.
காட்டப்படற விளம்பரங்களுக்கு காசும் கொடுக்குது கூகிள். 
நிறைய ஹிட்ஸ் கிடைச்சதுன்னா கணிசமான பணம் உங்க கணக்குல வந்து சேரும்.. பதிவு நீண்டுகிட்டே போகுது.. விரிவான தகவல்கள் விரைவில்.

Tags: screen video making software, screen recording, free screen recording software, free software, youtube, adsense, revenue, money making through google adsense.

4 Comments

Comments are closed.