Browser, firefox, tech news

ஹேக்கர்களிடமிருந்து பயனர்களை பாதுகாத்திட ஃபயர்பாக்ஸ் தரும் புதிய வசதி !

பெருகி வரும் ஆன்லைன் திருட்டுகளில் இருந்து தப்பிக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் ஃபயர்பாக்ஸ் தனது பங்கிற்கு வாடிக்கையாளர்களை பாதுகாத்திடும் வசதியை அடுத்த பதிப்பில் செய்யவிருக்கிறது.

தகவல்களை திருடும் வெப்சைட்கள், Scam Website கள் போன்றவற்றை பயனர்கள் பயன்படுத்தும்பொழுது அது தொடர்பான எச்சரிக்கை செய்தியை விடுக்கும்.

எச்சரிக்கை செய்தியின் மூலம் பயனர்கள் உஷார் அடைந்து தகவல்கள் திருடுபோகாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அடைய முடியும்.

இது தொடர்பான வேலைகளை ஃபயர்பாக்ஸ் முழுவீச்சில் செய்து வருகிறது.

இது தொடர்பாக FireFox வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அனைத்து வித ஃபயர்பாக்ஸ் பதிப்புகளிலும் இந்த வசதி அப்டேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: தற்பொழுது வெளிவந்துள்ள புதிய ஃபயர்பாக்ஸ் 2018 பதிப்பு ஏறக்குறைய Google Chrome வலை உலவிக்கு சரிசமமான Page Load Time பெற்றுள்ளது.

இப்பதிவை நீங்கள் விரும்பியிருந்தால் இதையும் படித்துப் பாருங்கள்.
டவுன்லோட் முடிந்தவுடன் தானாக ஷட்டவுன் ஆக ஃபயர்பாக்ஸ் நீட்சி 

Tags: Firefox, Protection, Hackers.