pendrive – Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Mon, 18 Mar 2013 03:29:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 பென்டிரைவைப் பாதுகாக்க default safe remove வசதி https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-default-s/ https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-default-s/#comments Mon, 18 Mar 2013 03:29:00 +0000 https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-default-s/ Read more]]>
Quickly remove USB devices without using Safe Removal

ரீமூவல் டிவைஸ் என்று சொல்லப்படும் பென்டிரைவ் போன்றவைகளை யு.எஸ்.பி  போர்ட்டில் செருகிப் பயன்படுத்துவீர்கள். 

சிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pendrive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.

சிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pendrive வை நீக்கிவிடுவார்கள்.

காரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,

usb safe remove default

usb safe remove default

தானாகவே Safe Remove கொடுப்பது எப்படி?  

என்பதைப் பார்ப்போம்.

  1. உங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.
  2. இப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.
  3. தோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.
  4. தோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.
  5. கிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும் அதில் காட்சியளிக்கும்.
  6. தோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.
  7. தோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின் பெயரைத் தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.
  8. இப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices என்பதைக் கிளிக் செய்து,  Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து தேர்வு செய்து வெளியேறுங்கள். 

இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

– சுப்புடு
]]>
https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-default-s/feed/ 2
புதிய பென்டிரைவ் Kingston DataTraveler 150 வெளியீடு..! https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%8d-kingston-datatraveler-150-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/ https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%8d-kingston-datatraveler-150-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/#comments Thu, 27 Oct 2011 09:47:00 +0000 https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%8d-kingston-datatraveler-150-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/ Read more]]> Pendrive தயாரிப்பில் பாப்புலர் நிறுவனம் Kingston. இந்நிறுவனம் அண்மையில் Kingston DataTraveler 150 (Capacity to 64GB) என்ற பிளாஷ் டிரைவினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கொள்ளளவு திறன் 64 ஜிபி.

பிற டிரைவ்களைக் காட்டிலும் சற்றே கூடுதல் நீளத்தில் வெளி வந்திருக்கிற இப்பென்டிரைவின் நீளம் 77.5மி.மீ. அகலம் 22 மிமீ. தடிமன் 12.05 மிமீ. இதனுடைய குறைந்த எடை.

Kingston DataTraveler 150

இதன் வெளிப்புற பக்கம் கண்ணைக் கவரக்கூடிய சிவப்பு வண்ணத்தில் பளிச்சிடுகிறது. இது இயக்கப்படும்போது உட்புறம் நீல நிற வெளிச்சம் தோன்றுகிறது.

பைல்களை படிக்கும் வேகம் நொடிக்கு 28.3 எம்பி. எழுதும் வேகம் நொடிக்கு 7.8 எம்பி. மற்ற பிளாஷ் டிரைவ்களில் காணப்படும் வேகத்தைப் போன்றே ஒத்திருக்கிறது.

வாரண்டி ஐந்து ஆண்டுகள் விலையோ ரூ. 6,700/- தான். என்ன நண்பர்களே இந்த பிளாஷ் டிரைவ் உங்களுக்குத் தேவைப்படுகிறதா? தளத்தில் இருக்கும் இந்த பென்டிரைவ் பற்றிய சிறப்புகள் ஆங்கிலத்தில்:

  1. Capacities: 64GB, 32GB
  2. Dimensions: 3.06″ x 0.9″ x 0.47″ (77.9mm x 22mm x 12.05mm)
  3. Operating Temperature: 32º F to 140º F (0º C to 60º C)
  4. Storage Temperature: -4º F to 185º F (-20º C to 85º C)
  5. Simple: Just plug into a USB port
  6. Convenient: Pocket-sized for easy transportability
  7. Guaranteed: Five-year warranty
  8. Compatible Operating Systems: Windows Vista (Windows ReadyBoost™ not supported), Windows XP (SP1, SP2), Windows 2000 (SP4), Mac OS X v.10.3.x and higher, Linux v.2.6.x and higher

மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் இங்கு செல்லவும்.

நன்றி நண்பர்களே..! மற்றுமொரு உபயோகமுள்ள பதிவின் வழி சந்திப்போம். வணக்கம்.

Tags: hardware, Kingston Data Traveler, Kingston mega Pendrive, Pendrive, Tech News, Flash Drive, 64GB Pendrive, 64GB Storage Flash Drive.

]]>
https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%af%8d-kingston-datatraveler-150-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf/feed/ 1
வைரஸ் பாதித்த pendrive லிருந்து நமது கோப்புகளை மீட்டெடுக்க https://softwareshops.net/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-pendrive-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/ Wed, 05 Oct 2011 03:32:00 +0000 https://softwareshops.net/%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-pendrive-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/ Read more]]> பெரும்பாலனவர்கள் தகவல்களை சேமிக்கும் கலனாக பயன்படுத்துவது USB என்று சொல்லக்கூடிய பென்டிரைவ் தான்.. இதில் அவர்ர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்வார்கள்.

இதில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை வைரஸ். அதுவும் பென் டிரைவ் என்றாலே சீக்கரம் வந்து ஒட்டிக்கொள்ளும் இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால் நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம்.  நம் வைத்திருக்கும் போல்டர்கள் காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

இந்த சிக்கலைத் தீர்க்க எளிய வழி ஒன்று உள்ளது..

உங்கள் கணினியில் பென் டிரைவ் இணையுங்கள்.  பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

அதாவது, G:  அல்லது வேறெந்த டிரைவில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,

உங்கள் கணினியில் Start==>Run==>CMD==> Enter தட்டுங்கள்.

தோன்றும் விண்டோவில் பென்டிரைவ் உள்ள டிரைவின் பெயரை கொடுக்கவும்.. அதாவது G என இருந்தால் G: என கொடுத்து என்டர் தட்டுங்கள்.

பிறகு attrib -s -h /s /d *.* என்பதை உள்ளிடுங்கள்.

virus affected pendreive repairing with command prompt

நீங்கள் சரியான இடைவெளிகளை பயன்படுத்தியிருக்கீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு என்டர் தட்டுங்கள்.

ஒரு சில வினாடிகளில் உங்கள் பென்டிரைவில் அனைத்து கோப்புகளும் மீண்டிருக்கும். மீட்டெடுத்த கோப்பைகளை நீங்கள் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்பதையும் சொல்லிவிட்டுப்போங்கள்..நன்றி..!

]]>