computer, pendrive

வைரஸ் பாதித்த pendrive லிருந்து நமது கோப்புகளை மீட்டெடுக்க

பெரும்பாலனவர்கள் தகவல்களை சேமிக்கும் கலனாக பயன்படுத்துவது USB என்று சொல்லக்கூடிய பென்டிரைவ் தான்.. இதில் அவர்ர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை சேமித்து வைத்துக்கொள்வார்கள்.

இதில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை வைரஸ். அதுவும் பென் டிரைவ் என்றாலே சீக்கரம் வந்து ஒட்டிக்கொள்ளும் இந்த கெடுதல் செய்யும் புரோக்ராம். இதனால் நமது தகவல்களை நாம் பார்க்க முடியாமல் போய்விடலாம்.  நம் வைத்திருக்கும் போல்டர்கள் காணாமல் போய்விடக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

இந்த சிக்கலைத் தீர்க்க எளிய வழி ஒன்று உள்ளது..

உங்கள் கணினியில் பென் டிரைவ் இணையுங்கள்.  பென்டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்பதை நீங்கள் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

அதாவது, G:  அல்லது வேறெந்த டிரைவில் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு,

உங்கள் கணினியில் Start==>Run==>CMD==> Enter தட்டுங்கள்.

தோன்றும் விண்டோவில் பென்டிரைவ் உள்ள டிரைவின் பெயரை கொடுக்கவும்.. அதாவது G என இருந்தால் G: என கொடுத்து என்டர் தட்டுங்கள்.

பிறகு attrib -s -h /s /d *.* என்பதை உள்ளிடுங்கள்.

virus affected pendreive repairing with command prompt

நீங்கள் சரியான இடைவெளிகளை பயன்படுத்தியிருக்கீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு என்டர் தட்டுங்கள்.

ஒரு சில வினாடிகளில் உங்கள் பென்டிரைவில் அனைத்து கோப்புகளும் மீண்டிருக்கும். மீட்டெடுத்த கோப்பைகளை நீங்கள் மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பதிவு பயனுள்ளதாக இருந்ததா என்பதையும் சொல்லிவிட்டுப்போங்கள்..நன்றி..!