Android, Technology, useful tech tips, ஆண்ட்ராய்ட், ஐபோன், தொழில்நுட்பம்

Smartphone தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது?

iPhone-Android phone fell down in the water? solution 

அதிக விலைக்கொடுத்து வாங்கிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன், iPhone ஆகியவைகள் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? யாராக இருந்தாலும் உடனே பதற்றம் ஏற்படும்.

ஒரு விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுபோல, உங்களுடைய android phone, iPhone, tablet, laptop போன்றவற்றிற்கும் முதலுதவி செய்வதன் மூலம் அவைகள் ரிப்பேர் ஆவதிலிருந்து தடுக்கலாம்.

தண்ணீரில் விழுந்துவிட்ட போனை முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் முதலில் செய்ய வேண்டியவைகள்:

solution for fell down smartphone in the water

  1. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடவும்.
  2. எடுத்தவுடன் அதை ஸ்விட்ஸ் ஆப் (Switch Off) செய்யவும்.
    அதற்கு உறைகள் (Phone cover) ஏதேனும் இருப்பின் அவற்றை முதலில் நீக்கிவிடவும்.
  3. பிறகு நல்ல சுத்தமான காட்டன் துணியைக் (cotton cloth) கொண்டு உங்கள் Smartphone -ஐநன்றாக துடைக்கவும். 
  4.  தண்ணீரை போக்க உங்களுடைய ஸமார்ட் போனை உதற வேண்டாம். அவ்வாறு போனை உதறுவதாலோ, அல்லது குலுக்குவதாலோ போனில் உள்ளிருக்கும் பகுதிகளுக்கு தண்ணீரானது பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.
  5. காது துடைப்பான் கொண்டு ஆடியோ ஜேக்கில் (Audio Jack port) உள்ள நீரை அகற்றவும். 
  6. காது துடைப்பான் இல்லை எனில் ஒரு துணியை நன்றாக கூர்மையாக முறுக்கி அந்த துளைகளில் விட்டு ஈரத்தை வெளியேற்றவும்..
  7. மேலும் ஐபோனின் Home Button, Volume Button, Mute Button, Speaker, Microphone உள்ளிட்ட பகுதிகளை நன்றாக துடைத்து ஈரத்தை முடிந்தவரை முழுவதுமாக துடைத்து எடுத்துவிடவும். 

தண்ணீரை சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டாலே போதும். கண்டிப்பாக ஸ்மார்ட்போன் ரிப்பேர் ஆகாது.

நன்றாக உலர்ந்த பிறகு உங்களுடைய ஸ்மார்ட்போனை Switch ON செய்து இயக்கிப் பார்க்கவும். உங்களுடைய ஸ்மார்ட்போன் சரியாக வேலை செய்யும். ஒருவேளை சரியாக இயங்கவில்லை எனில் அருகில் இருக்கும் Smartphone Service Center-ல் கொடுத்து அதை சரிசெய்ய வேண்டும்.

iPhone தண்ணீரில் விழுவதால் ஏற்படும் பாதிப்புகள்:

  • iPhone Sensor பாதிக்கப்படும். சென்சார் பாதிக்கப்பட்டதை ஐபோனில் சிவப்பு நிறத்தில் லைட் எரிவதை வைத்து உறுதிப்படுத்தலாம்.
  • home button வேலை செய்யாமல் போகலாம். அதற்கு Onscreen Home Button என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
  • ஆடியோ அவுட்புட் (Audio Out Put) வேலை செய்யாது. அதாவது ஐபோனிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகலாம்.
  • ஐபோனில் இருக்கும் மற்ற முக்கிய பட்டன்கள் அதாவது ஹோம் பட்டன், Mute Button, Power Button ஆகியவை இயங்காமல் இருக்கும். பவர் பட்டன் வேலை செய்வதற்கான Alternative Application எதுவும் இல்லை. ஆண்ட்ராய்ட் போனில் உள்ள மற்ற பட்டன்கள் வேலை செய்ய Alternative Applications அப்ளிகேஷன் உண்டு.
  • Touch Screen (தொடுதிரை ) இயக்கமற்று செயலிழந்து போக வாய்ப்பு உண்டு. அதற்கு பதிலாக புதியதாக Touch Screen மாற்றக் கொள்ளலாம். 
  • வாட்டர் புரூப் உறைகளைப் (Water Proof Smartphone cases) பயன்படுத்தலாம். அது கூடிய வரையில் உங்களுடைய விலையுயர்ந்த சாதனங்களில் தண்ணீர் உள்ளே புகாமல் பாதுகாக்கும். 
கவனமாக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலே பெரும்பாலான இழப்புகளைத் தவிர்க்கலாம். நன்றி.

This post explains how to protect your android phone, iPhones from water affects.
If your phone fell down in the water, first take the phone in the water immediately. Then Switch off your phone quickly. Then In addition, swipe the water using pure cotton cloth on your phone. This step helps you to dry your phone.  Next, you must dry it your Smartphone’s audio jack port using q pad or cloth.

நன்றி.

– சுப்புடு

2 Comments

Comments are closed.