tech news

அரை நிமிடத்தில் சார்ஜ் ஃபுல் ஆகும் பேட்டரி !

ஸ்மார்ட்போனுக்கு சார்ஜ் செய்வது என்பது இனி ஈசிதான். பேட்டர் சார்ஜ் புல்லாக முன்பு சில மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். அதுவே பெரிய தலைவலியாக இருந்தது வந்தது. நினைத்த உடனே பேட்டரி சார்ஜ் புல் செய்து கொள்ள முடியாதா என நிறைய பேர் ஏங்கினர்.

அந்த எதிர்பார்ப்பைத் தீர்க்கும் வகையில் ஸ்டோர் டாட் என்ற நிறுவனம் புதிய பேட்டரி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அரை  நிமிடத்திலேயே முழுவதுமாக சார்ஜ் ஆகும்படி அந்த பேட்டரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பேட்டரிகள் முழுவதும் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

quick-recharge-smartphone-battery

இதற்கு காரணம் மின் தேக்குதிறன் வேகம் குறைவாக உள்ளதுதான்.

இந்த பிரச்சினைக்கான தீர்வை  ஸ்டோர் டாட் நிறுவனம் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளது.


இந்த நிறுவனம் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ள நானோ டாட்ஸ் என்ற மூலக்கூறுகள் பேட்டரியில் உள்ள Electrode (எலக்ட்ரோட் ) மற்றும் Electrolyte (எலக்ட்ரோலைட் )ஆகியவற்றின்  திறன்களை மேம்படுத்தும் விதத்தில் உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் விளைவாக அரை நிமிடத்தில் முழுவதும் Recharge ஆகும் Battery-ஐ இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நவீன Battery தொழில்நுட்பம் Cellphone,Laptop போன்ற சாதனங்களைத் தவிர எலக்ட்ரிக்கல் கார்,பைக் போன்றவற்றிலும் பயன்படுத்தப்பட உள்ளது.

One Comment

Comments are closed.