actress, cinema, cinema news

இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த டிடி? மாப்பிள்ளை யார் தெரியுமா?

anchor dd latest updates

சொன்னால் நம்ப மாட்டீர்கள். தொகுப்பாளினி டிடி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாராம். தகவல்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன. என்ன இது அதிசயமா இருக்கே என்று ஆச்சர்யப்பட வேண்டாம். 

1999 லிருந்தே டிவி தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினி என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கெட்டிக்காரி. 
சக தொகுப்பாளர்கள் மற்றும் நண்பர்களிடம் வெகு இயல்பாக பழக கூடியவர். தொடர்ந்து பணியாற்றி வந்த போது டைரக்டரும், நீண்ட கால நண்பருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். 

6 மாதங்களில் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட விவாகரத்து பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வந்த டிடி தற்பொழுது மீண்டும் திருமணம் செய்ய விருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. 

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரை அவர் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வந்தாலும், அதை அவர் இன்னும் உறுதி செய்யவில்லை. 

ஒருவேளை அந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். 

இத்தனை நாள் தனிமையில் இருந்த டிடி இப்பொழுதாவது குடும்ப வாழ்க்கைக்கு திரும்பியுள்ளாரே என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு கிடைக்கும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.