android app, camera app

தரமான போட்டோ எடுக்க உதவும் கேமிரா ஆப்ஸ் !

உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக தரமான புகைப்படங்களை எடுக்க சில கேமிரா ஆப்ஸ்கள் பயன்படுகின்றன. வழக்கமான ஸ்மார்ட்போன் கேமிராவில் எடுக்கும் புகைப்படங்களை காட்டிலும் தரம் உயர்ந்த, வித்தியாசமான புகைப்படங்களை இந்த Camera Apps ஆப்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் எடுக்கலாம்.  சிறந்த அவுட்புட் இதன் மூலம் கிடைக்கும்.

best camera apps

Open Camera – ஓப்பன் கேமிரா

டேப்ளட் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான மிகச்சிறந்த கேமிரா ஆப் இது. இதிலுள்ள ஆட்டோ ஸ்டெபிலைஸ் வசதி போட்டோக்களை எடுக்க உதவுகிறது. கேமிராவின் செயல்பாட்டை அமுல்படுத்த உதவுகிறது.
HD Video Recording செய்ய உதவுகிறது.

focus modes, scene modes, color effects, white balance, ISO, exposure compensation/lock, face detection, torch மேலும் எண்ணற்ற செயல்பாட்டை செய்திட உதவுகிறது.

டவுன்லோட் செய்ய சுட்டி: Open Camera

Candy Camera – கேன்டி கேமிரா

இதை செல்பி எக்ஸ்பர்ட் ஆப் என்று சொல்லலாம். செல்ஃபி படங்களை அழகூட்ட பயன்படுகிறது. அதே சமயம் போட்டோ எடிட்டராகவும் பயன்படுகிறது. இதிலுள்ள Beautify Filter மூலம் தினமும் 1 லட்சம் பேர் செல்பி எடுத்து தங்களது முகங்களை அழகுபடுத்திக்கொள்கின்றனர்.

டவுன்லோட் செய்ய சுட்டி: Candy Camera

DSLR Camera – டிஎஸ்எல் கேமிரா

DSLR Camera வில் இருக்கும் சிறப்பம்சம் பேக்ரவுண்டை Blur செய்து போட்டோ எடுப்பதுதான். அத்தகைய அருமையான எஃபக்டை கொடுக்க உதவுகிறது DSLR Camera ஆப். உதாரணத்திற்கு கீழுள்ள புகைப்படத்தை பாருங்கள்.

டவுன்லோட் செய்ய சுட்டி: Download DSLR Camera

PIP Face Camera Photo Editor – பிப் ஃபேஸ் கேமிரா போட்டோ எடிட்டர்

செல்ஃபி போட்டோக்களுக்கு சிறந்த போட்டோ ஃப்ரேம் கொடுக்கும் ஆப் இது. அது மட்டுமல்லாமல் கொலாஜ் லேஅவுட், அற்புதமான பிரேம்களுடன் கூடிய போட்டோக்களை எடுக்க உதவுகிறது.

smartphone camera app

டவுன்லோட் செய்ய சுட்டி: Download PIP Face Camera Photo Editor

மேலும் பல ஆயிரக்கணக்கான ஸ்மார்ட்போன் கேமிரா ஆப்ஸ்கள் கூகிள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கின்றன. உங்களுக்குத் தேவையான கேமிரா ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்திட கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.

Click on Link to Find out Camera App Suitable for You