movie review, சினிமா விமர்சனம், திரை விமர்சனம்

பட்டாஸ் – தமிழ் திரை விமர்சனம்

கொடி படத்திற்கு பிறகு  இயக்குனர் செந்தில்குமார் இயக்கியிருக்கும் படம் பட்டாஸ். எதிர்நீச்சல், கொடி, காக்கிச்சட்டை என இதற்கு முன்பு சில படங்களை இயக்கியிருக்கும் தனுசை வைத்து இயக்கிய இரண்டாவது படம் இது. கதை என்ன? ஒரே வரியில் சொல்வதானால் தந்தையை கொன்று விட்டு ஜாலியாக இருக்கும் வில்லனை திரும்ப மகன் வந்து பலி வாங்கும் கதை. அவ்வளவுதான். ஒன்லைன் கேட்டவுடனே போர் அடிக்குமே. ஆமாம். அதேதான்.

திருடனாக வாழ்ந்து வரும் பட்டாஸ், அதே பகுதியில் வாழ்ந்து வரும் கதாநாயகியை காதலித்து வருகிறார். அவ்வப்பொழுது சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுவதுதான் இவர் வலை. அப்படி ஒரு பெண்ணிடம் பணத்தை பறிக்க முயலும்போது, அவர்தான் தன்னுடைய தாய் என்று தனுஷிற்கு தெரியவருகிறது.

தாயாக சினேகா நடித்து இருக்கிறார். அப்போது சென்னையில் பெரிய குத்து சண்டை போட்டி நடத்த திட்டமிடுகிறார் சென்னையில் ஒரு பெரிய புள்ளி. அதை ஏற்பாடு செய்தவர்கள் தன் தந்தையை கொன்று, தாயை சிறைக்கு அனுப்பியவன் என தெரிவருகிறது நாயகனுக்கு.

pattas thirai vimarchanam

நாயகன் சும்மா இருப்பாரா?
வழக்கமான பழி வாங்கல் கதைதான்.
திரைப்படத்தின் முதல்பாதியில் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் தனுஷ் ரசிக்க வைக்கிறார். கதையின் முற்பகுதியில் இருந்த சுவாராஷ்யம் பிற் பகுதியில் இல்லாமல் போகிறது.

தந்தை கொல்லப்படும்போது, தாய் பிரிந்து சிறை செல்வது,  மகன் அனாதை ஆவது என வழக்கமா புளிச்ச மாவுதான். ஆனால் தோசையை நன்றாகவே சுட்டு இருக்கிறார்கள்.

விஷம் வைத்து ஊரை கொல்லும் வில்லன், வில்லனை போட்டுத் தள்ள உதவும் கதாநாயகி படம் செம போர். திரைக்கதையை கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள் அருமை. செந்தில் குமார் தன்னுடைய முந்தை படங்களைவிட சில படிகள் பின்னோக்கி சென்றிருக்கார் என்பதுதான் படத்தின் மூலம் தெரிகிறது. தனுஷ் இந்த படத்தில் ஏன் நடித்தார் என்ற கேள்வி மட்டும் இன்னும் தொக்கி நிற்கிறது. செந்தில்குமாரின் மீது உள்ள நம்பிக்கையா? இல்லை கதை கேட்டதில் கோட்டை விட்டாரா என்பது புரியவில்லை.

பட்டாஸ் – புஷ் வானம். !