Free software

போட்டோவை ஓவியமாக மாற்றிட மென்பொருள்

போட்டோவை ஒரே கிளிக்கில் ஓவியமாக மாற்றிட உதவுகிறது ஒரு மென்பொருள். இதில் உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்து, அங்கு கொடுத்திருக்கும் Drawing Parameter ல் உள்ள வசதிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பதன் மூலம். அந்த படத்தைப் போன்றே உங்களுடைய போட்டோ ஓவியமாக மாற்றப்படுகிறது.

அருமையான மென்பொருளின் பெயர் : Foto Sketcher.

உங்களுடைய டிஜிட்டல் போட்டோவை அழகான “ஸ்கெட்ச் ஓவியம்” போல மாற்றிடுவதால் மென்பொருளுக்கு “போட்டோ ஸ்கெட்சர்” என பொருத்தமாக பெயரிட்டுள்ளனர்.

photo to drawing software

எப்படி போட்டோவை ஓவியமாக மாற்றுவது?

1. முதலில் போட்டோ ஸ்கெட்ச் இணையத்தளத்திற்கு சென்று Download என்ற இணைப்பைச் சொடுக்கி மென்பொருளை டவுன்லோட் செய்திடவும். (சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
2. டவுன்லோட் செய்யப்பட்ட மென்பொருளை நிறுவி, திறக்கவும். (Install & Open)
3. இப்பொழுது File ==> Open கொடுத்து, உங்களுடைய போட்டோவை அதில் திறந்துகொள்ளவும்.
4. உடன் தோன்றிடும் Drawing Parameters என்ற பலகத்தில் உள்ள Drawing Style என்பதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றினை தெரிவு செய்யவும்.
5. விரும்பினால் கீழுள்ள வசதிகளில் மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.
6. இறுதியாக கீழுள்ள Draw என்ற பட்டனை அழுத்தினால், உங்களுடைய புகைப்படம் ஓவியமாக மாற்றப்பட்டுவிடும்.
7. மாற்றிய பின்னர் Save as Drawing (Ctrl+S) கொடுத்து, ஓவியத்தை JPEG, PNG, BMP ஃபைல் பார்மட்டில் சேமித்து விடலாம்.

drawing parameters

இது முற்றிலும் இலவசமான மென்பொருள். இதில் உள்ள வசதிகள் ஏராளம். இது ஒரு Freeware.

மேலும் மென்பொருள் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள About FotoSketcher என்ற பட்டனை அழுத்தித் தெரிந்துகொள்ளலாம்.

போட்டோ ஸ்கெட்சரை பயன்படுத்திட, சந்தேகம் இருப்பின் அதில் உள்ள Help வசதியைச் சொடுக்கி, அதிலுள்ள உதவிக்குறிப்புகளை படித்து அறிந்துகொள்ளலாம்.

பயன்படுத்த மிக மிக எளிதாக இருப்பதால் (User Friendly) உண்மையிலேயே இது ஒரு அருமையான மென்பொருள். 8.47 MB அளவுள்ள இந்த மென்பொருள் டவுன்லோட் செய்திட ஒரு சில நொடிகள் போதுமானது.

விண்டோஸ்7, விண்டோஸ் 10 என விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் இயங்குகிறது.  Adware போன்ற தொல்லை தரும் நிரல்கள் ஏதும் இல்லை. எனவே நம்பிக்கையுடன் தரவிறக்கி பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருள் பிடித்திருந்தால்,  அவர்களுக்கு உதவுவதற்கு அவர்களுடைய இணையதளத்திற்கு சென்று Donate பட்டனை அழுத்தி நீங்கள் விரும்பிய தொகையை Paypal மூலம் அளித்திடலாம்.

மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download FotoSketcher