news

மம்மி ஷூக்குள்ள சத்தம் வருது.. ! பயந்து ஓடிய சிறுமிக்கு என்ன நடந்தது தெரியுமா?

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த சிறுமி ரக்ஷனா. பள்ளி செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தாள். காலையில் குளித்து முடித்து, சாப்பிட்டு, உடைமாற்றிக்கொண்டு பள்ளி பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் உள்ள ஷூவை அணிந்துகொள்ள முற்பட்டாள்.

அப்பொழுது ஷூவிலிருந்து சத்தம் வரவே பயந்துபோன சிறுமி அம்மா ஷூக்குள்ளிருந்து ஏதோ சத்தம் வருது என்று பயந்து போய் உள்ளே ஓடினாள். சமையலறையில் இருந்த ரஷனாவின் அம்மா என்ன ஏதென்று பார்க்க, அதிர்ச்சியில் உறைந்தே போனார்.

ஷூவுக்குள் பாம்பு ஒன்று ஒளிந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சம யோசிதமாக அருகில் இருந்த கணமான கூடை என்றை எடுத்து அந்த ஷீவை மூடிவிட்டு, பயர்சர்வீஸ் ஆபிசிற்கு அவசரமான போன் செய்து விஷயத்தை சொன்னார். உடனடியாக அங்கு வந்து பாவனி பயர்சரவீஸ்  வீர ர் அந்த கூடியை நகர்த்திவிட்டு உள்ளிருந்த பாம்பை இலாவகமாக எடுத்தனர்.

அப்போது பயங்கர ஆக்ரோசமாக அந்த பாம்பு சீறியது. அப்போதுதான் தெரிந்தது அது கடுமையான விஷம் கொண்ட நாகப்பாம்பு என்பது. சுமார் 2 அரை அடி நீளம் கொண்ட அந்த பாம்பை பிடித்து,பத்திரமாக அருகில் உள்ள வனக்காட்டில் விட்டனர்.

5ம் வகுப்பு படிக்கும் ரக்ஷனா ஷூவை அணிவதற்கு முன்பு கவனமாக பார்த்ததால், அதிலிருந்த பாம்புவை கவனிக்க நேர்ந்தது. இதுபற்றி அவளது அம்மா கூறுகையில் சின்ன வயதிலிருந்தே ஷீ, ஷாக்சை போடுவதற்கு முன்பு ஒன்றுக்கு இருமுறை நன்றாக சோதித்த பிறகுதான் அணிய வேண்டும் என கற்றுக் கொடுத்திருக்கிறோம். அதுவே இப்பொழுது என்னுடைய மகளை காப்பாற்ற காரணமாகியது. எனவே பெற்றோர்கள், மழைக்காலம், வெயில்காலம் என்று இல்லை. எந்த காலத்திலும் பூச்சிகள், விஷ ஜந்துகள் எப்படியாவது வீட்டினுள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன்பு சர்வ ஜாக்கிரதையாக கவனித்து அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

சிறுமி ரக்ஷனாவின் எச்சரிக்கை தன்மை குறித்து அங்கு வந்த அக்கப்பக்கத்தினர்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.