micromax, specifications

SIM Card மற்றும் VideoCall வசதியுள்ள டேப்ளட் பி.சி.

Smartphone -க்கும், Tablet -க்கும் உள்ள வித்தியாசங்கள் குறைந்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை அம்சங்களையும் தற்பொழுது வெளிவரும் டேப்ளட் பி.சி.க்களும் கொண்டுள்ளன.

அந்த வகையில் SIM பயன்பாடு மற்றும் Video-call வசதியுடன் வந்திருக்கும் ஒரு புதிய டேப்ளட் பி.சி. குறித்த தகவல்களை அறிந்துகொள்வோம்.

Micromax fun book P600 என்ற இந்த டேப்ளட்டில் ஸ்மார்ட்போனில் பேசுவது போன்ற Vioce Call வசதி உள்ளது. இரண்டு மெகா பிக்சல் திறனுடைய பின்புற கேமரா, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள ஒரு முன்புற கேமிரா என அசத்தும் இந்த டேப்ளட்டானது Android 4.0 இயங்குதளத்தில் இயங்குகிறது.

திரை அகலம் என்று பார்க்கும்பொழுது, 7 அங்குலத்துடன் கூடிய TFT Capacitive touch Screen உள்ளது. இந்த திரையில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம் multi-touch support.

மேலும் இந்த டேப்ளட்டின் இயக்கத்திற்குப் பயன்படும் 1GHz Cortex A5 Dual Core Processor, 512 MB RAM, 4GB ROM ஆகியனவும் உண்டு.

டேப்ளட்டின் மெமரியை அதிகரிக்க 2GB, 3GB வரை அதிகரிப்பதற்கான MicroSD Cardஉ பயன்பாடும் உண்டு. நெட்வொர்க் கனக்டிவிட்டிற்கு பயன்படும் 3G, WiFI, HDMI Port போன்ற வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

மேற்கூறிய வசதிகள் மற்றும் டேப்லட்டில் அடங்கியுள்ள சிறப்பு கூறுகள், பாகங்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சக்தியை அளிப்பதற்கு Lithium Polymer வகைச் சார்ந்த ஒரு சூப்பர் பேட்டரியும் உண்டு.

இதில் உள்ள சிறப்பம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Micromax fun book P600 Tablet PC Specifications

  • Android OS 4.0.4 (Ice Cream Sandwich)
  • 7.0-inch TFT Capacitive Touch screen,16 M Colors (480 x 800 pixels)
  • Voice call supported (SIM)
  • 1 GHz Cortex-A5 Dual Core Processor
  • RAM 512 MB, ROM 4 GB
  • 2 GB Internal Memory
  • microSD (up to 32GB) External Memory
  • 2 MP  Rear Camera, One Front camera
  • Lithum Polymer battery (Browsing Time: 4 hrs  and  Stand By Time: 224 hrs )
  •  3G, HDMI, Wi-Fi, Micro USB v2.0 are other features

இதன் விலை ரூபாய் 6797/-