mouse, tech news

Touch Ring Mouse | மோதிர மௌஸ் !

கம்ப்யூட்டர் சாதனங்கள் நாள்தோறும் புதிய மாற்றங்களைப் பெற்று வருகிறது. ஒன்றிலிருந்து ஒன்று மேம்படுத்தப்பட்டு, புதிய வடிவில் பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும், அதே சமயம் எடையில் குறைந்து, அளவு சிறியதாகவும் வெளியிடப்படுகிறது.

செல்போன், கம்யூட்டர்கள் ஆகியவற்றின் துணை பாகங்களும் அவ்வாறுதான். ஆனால் கணினியில் மிக முக்கியமானதாக கருதபடும் மௌஸ் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், குறிப்பிடத்தக்க மாற்றத்தைப் பெறவில்லை.

thumb track little finger mouse

அதன் வடிவம் ஒரே மாதிரியானதாக, அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதேனும் இன்றி  அப்படியே பயன்படுத்தி வந்துகொண்டிருக்கிறோம்.

தற்பொழுது அந்த குறையை போக்கும் விதமாக, மௌசிலும் மாற்றங்கள் வரத் துவங்கியுள்ளன. விரல்களில் மாட்டிக்கொண்டு செயல்படுத்தக்கூடிய புதிய மவுஸ் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

விரலில் மோதிரம் போல மாட்டிக்கொண்டு, அதைச் செயல்படுத்திட முடியும். இந்த வகை மௌசிற்கு ThumbTrack என பெயரிட்டுள்ளனர்.

வழக்கமான சுட்டெலியில் உள்ள Scroll, left click, right clik, doble click, single click ஆகிய வசதிகள் இதிலும் உண்டு. முந்தைய மௌசைவிட இது அளவில் மிகவும் சிறியது.

இந்த நவீன மௌசை MindStream Inc என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த  touch ring-mouse பயன்படுத்துவதால் தற்பொழுது வழக்கமான மௌசை பயன்படுத்தும்போது ஏற்படும் கை மூட்டு வலி, மணிக்கட்டு, நரம்பு வலிகள் போன்றவை ஏற்படாது. இயல்பாக அவற்றை விரலில் மாட்டிக்கொண்டு செயல்படுத்துவதால் அதுபோன்ற மணிக்கட்டு நோய்கள் ஏதும் வருவதற்கு வாய்ப்பில்லை என அதை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ThumbTrack is an ergonomic touch ring-mouse controlled by the tip of your thumb. Perform all mouse functions with ease, eliminating the risk of pain or injury to your hand and wrist.