cinema

அப்பா படத்தில் நடித்த யுவஸ்ரீ யா இது? அடேங்கப்பா.. ஆளே மாறிட்டாங்களே !

2019 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 படத்தில்  அமலா பாலுக்கு மகளாக நடித்தவர் யுவஸ்ரீ. அந்த படத்தில் கணவர் துணையில்லாமல் இருப்பவராக அமலாபால் நடித்து அசத்தியிருப்பார். 

அந்த படத்தில் அமலாபாலுக்கு மகளாக நடித்த குழந்தை கதாபாத்திரம் தான் யுவஸ்ரீ.  இவர் காரைக்கால் ஊரைச் சேர்ந்தவர்.

பள்ளி பருவத்தில் ஒரு குறும்படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். அதைப் பார்த்த சமுத்திரகனி, நல்ல நடிப்பு என பாராட்டியதோடு, அவருக்கு 
 ”அம்மா கணக்கு” படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். 

அதற்கடுத்து  ”அப்பா”, காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவர் தமிழ் மொழி படம் மட்டுமல்லாமல், மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
அப்பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த யுவஸ்ரீ இப்பொழுது வளர்ந்து பெரிய கதாநாயகி அளவிற்கு வளர்ந்து புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். 

”நினைவெல்லாம் நீயடா” என்ற படத்தின் மூலம் தன் கரியரை தொடங்கியுள்ளார். 

அப்பொழுது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடே  அடே.. .அப்பா படத்தில் நடித்த யுவஸ்ரீ யா இது? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.