acer computer, computer specifications, tech news, ஏசர்

ஆசர் ஆஸ்பையர் கம்ப்யூட்டர் சிறப்பு தகவல்கள்

லேப்டாப்களில் புதுமைகளைப் படைத்து வரும் ஆசர் நிறுவனம் அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளடங்கிய கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தை தற்பொழுது பூர்த்தி செய்துள்ளது.
பெர்லினில் நடக்கும் IFA Berlin 2013 தொழில்நுட்ப கண்காட்சில் தன்னுடைய புதிய  Acer Aspire U5-610 all in one computer வெளியிட உள்ளது.
Acer ASpire U5-610 all in one computer
ஏசர் ஆல் இன் ஒன் கம்ப்யூட்டர்

Acer ASpire U5-610 all in one computer சிறப்புகள்:

இக் கம்ப்யூட்டரில் 23 இன்ச் ஸ்கிரீன் டிஸ்பிளேயும், விண்டோஸ் 8 இயங்குதளமும் உள்ளது. கம்ப்யூட்டர் விரைவாக இயங்குவதற்கு ஏற்ற Latest Intel Processor மற்றும் 16GB வரைக்கும் ராம் மெமரி பயன்படுத்தக்கூடிய வசதியும் உள்ளது. அதனுடன் Geforce GTX 760M கிராபிக்ஸ் கார்டும் உள்ளது.

இக் கம்ப்யூட்டரில் இருக்கும் மிகச்சிறந்த பயன்பாடு ரிமோட் டெக்னாலஜி. இந்த ரிமோட் டெக்னாலஜி மூலம் உங்களிடம் உள்ள ஆப்பிள், ஆண்ட்ராய்ட் போன்களை இணைத்து bluetooth, wifi வசதிகளின் மூலம் கம்ப்யூட்டரை இயக்க முடியும்.

மேலும் இப்புதிய ஏசர் கம்ப்யூட்டரில் touch sensitive, wireless key board and mouse ஆகியவைகளும் உள்ளது.