cinema

56 வயது தொழிலதிபருடன் காதலா? நடிகை பூஜா ஹெட்ஜ்க்கு என்னாச்சி? புலம்பும் ரசிகர்கள் !

pooja hedge

சினிமா உலகம் என்றாலே பொய்யும் புரட்டும் , கிசு கிசுக்களும் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் சம்பந்தபட்ட நடிகர்/நடிகைகளே ஆள் வைத்து பாப்புலாரிட்டிக்காக அவர்களை பற்றிய தகவல்கள் பரவ வேண்டும் என்பதற்காக கேசிப்பை பரப்பி விட செய்வார்கள். 

சில காலணா , அரையணா ஊடகங்கள் கொஞ்சம் கூட வெட்கமின்றி பொய்யான தகவல்களை பரப்பி டிபி ஏற்றுவதற்காக, நடிகர் நடிகைகளில் பிபி ஏற்றி விடுவார்கள். ஒரு வகையில் அது நல்லது தான் என்று சம்பந்த பட்டவர்களும், இலவசமாக விளம்பரம் கிடைக்கிறதே என விட்டு விடுவார்கள்.

அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாலிவுட் படத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் தொடர்பு படுத்தி பேசபட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மையில் அப்பா வயதான அவருடன் எப்படியெல்லாம் இணைத்து எழுத முடியுமா என்று ரசிகர்கள் கொந்தளித்துப் போயிருந்தனர்.  அந்த நடிகை பூஜா ஹெக்டே. 
தற்போது அதிக பட வாய்ப்பின்றி இருக்கும் நிலையில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே பற்றி அவரே கிளப்பி விட்ட தகவலா என்ற கோணத்தில் கூட ரசிகர்கள் ஆர்வமாக விசாரித்து வந்தனர். 

சல்மான் கானுடன் காதலா?

நடிகர் சல்மான்கான் முரட்டு சிங்கிள். படபிடிப்பின்போது, அவருடன் அதிக நேரம் பேசி கொண்டிருந்ததால் இப்படி ஒரு கிசு கிசுவை கிளப்பி உள்ளனர் என்பது தெரிய வந்தது. 
சீனியர் நடிகருடன் நட்பு ரீதியாக பழகி வந்ததை இப்படி கொண்டு போய் சேர்த்துள்ளார்களே என பூஜா ஹெக்டே நெருங்கிய வட்டாரங்கள் வருத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பூஜா ஹெக்டே சல்மான் கான் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்க விருக்கும் இரு திரைப்படங்களில் கதா நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளி வந்துள்ளது. 
 56 வயதாகும் நடிகர் சல்மான் கானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.